Namvazhvu
திருத்தந்தை புனிதர்கள், இறைவிருப்பத்தை அச்சமின்றி நிறைவேற்றியவர்கள்
Friday, 11 Nov 2022 09:04 am
Namvazhvu

Namvazhvu

புனிதர்கள் என்பவர்கள், நாம் வாழ்கின்ற பிரபஞ்சத்திற்கு இணையான மற்றொரு பிரபஞ்சத்திலிருந்து வருகிறவர்கள் அல்ல, மாறாக, அவர்கள், படிப்பு மற்றும், பணியில், தங்களின் குடும்பங்களோடு தினசரி வாழ்விலும், சமூக, பொருளாதார, மற்றும், அரசியல் வாழ்விலும் வேரூன்றப்பட்டிருந்த நம்பிக்கையாளர்கள். இவையனைத்திலும் இவர்கள், கடவுளின் திருவிருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அச்சமின்றி செயல்பட்டவர்கள்என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

புனிதத்தன்மையின் எடுத்துக்காட்டுகள், மற்றும், Divinus Perfectionis Magister (1983) என்ற திருத்தூது கொள்கைத் திரட்டு வெளியிடப்பட்டதிலிருந்து நாற்பது ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள புனிதர்கள்என்ற தலைப்பில், உரோம் பாப்பிறை இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் மூன்று நாள் கருத்தரங்கையொட்டி, இந்நாள்களில் புனிதர்கள் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் விளக்கி வருகிறார்.

சந்திப்புக்கள்

மேலும், ஜோர்டன் அரசர் இரண்டாம் அப்துல்லா இபின் அல் ஹூசைன் அவர்களும், ருமேனியா நாட்டு அரசி மார்கிரேட், இளவரசர் Radu மற்றும், அவர்களோடு சென்றிருந்த பிரமுகர்களும்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

வியாழன் காலையில், கனடா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Raymond Poissonஅப்பேரவையின் உதவித்தலைவர் ஆயர் William Terrence McGrattan, அதன் பொதுச் செயலர் அருள்பணி Jean Vézina ஆகிய மூவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.