Namvazhvu
ப்ரோ ஓரண்டிபஸ் தினம் ஆழ்தியான சபையினர் செபம் வழியாக திருஅவைக்கு உதவுகின்றனர்
Tuesday, 22 Nov 2022 09:42 am
Namvazhvu

Namvazhvu

ஆழ்நிலை தியான துறவு சபையினர், இறைவேண்டல் மற்றும், தன்னொறுத்தல் வழியாக திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்களன்று கூறியுள்ளார்.

நவம்பர் 21,  திங்களன்று ஆழ்நிலை தியான சபையினர் உலக நாள் (ப்ரோ ஓரண்டிபஸ் தினம்: இறைவேண்டல் செய்பவர்களுக்காக) சிறப்பிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.

தனிமையிலும், அமைதியிலும், இடைவிடா இறைவேண்டலிலும் விருப்போடு மேற்கொள்ளும் தன்னொறுத்தலிலும் தங்களை அர்ப்பணித்துள்ள ஆழ்நிலை தியான துறவு சபையினரின் உலக நாள், அன்னை மரியா மூன்று வயது சிறுமியாக இருந்தபோது எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவுகூரும் திருநாளான நவம்பர் 21ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வுலக நாளை திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் 1953ஆம் ஆண்டில் உருவாக்கினார்.  ]

கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத் துறையின் புதிய தலைவர்

இன்னும், கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத் துறையின் புதிய தலைவராக, இதுவரை பிரித்தானியாவில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் கிளாடியோ குகெரோட்டி அவர்களை நவம்பர் 21, திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்,

மேலும்திங்கள் காலை 9.30 மணிக்கு, வத்திக்கானின் பொலோஞ்ஞா அறையில், திருப்பீடத் துறைகளுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்றது.