Namvazhvu
கொழும்பு காரித்தாசின் பாராட்டுக்குரிய தவக்கால நடவடிக்கைகள்
Thursday, 20 Jun 2019 06:49 am

Namvazhvu

இலங்கையின் கொழும்பு உயர்மறை
மாவட்டத்தில், இவ்வாண்டு தவக்காலத்தில் திரட்டப்படும் நன்கொடை நிதி, இளை யோர், மாற்றுத்திறன்கொண்ட சிறார் மற்றும்
புற்றுநோயாளிகளுக்காகப் பயன்படுத்தப் படும் என்று, அம்மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி லாரன்ஸ் ராமநாயக்கே அவர்கள் தெரிவித் தார். சேத் சரணா எனப்படும் கொழும்பு காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்
பணி ராமநாயக்கே  நிதி சேகரிப்புக்கென ஏறக்குறைய மூன்று இலட்சம் காகித உறைகள் மற்றும், 1,500 உண்டியல் பெட்டிகள் தயார்செய்யப்பட்டுள்ளன என்றும்
134 பங்குத்தளங்கள், கத்தோலிக்க பள்ளிகள்
மற்றும், உயர்மறைமாவட்ட அமைப்புகளில்
இந்நடவடிக்கை குறித்து விளக்குவதற்கு உதவியாக, துண்டுப் பிரசுரங்கள் அச்
சிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.    கடந்த ஆண்டு தவக்காலத்தில், 17,32,363 ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.  இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் காரித்தாஸ் செடேக்  எனப்படும் இந்தப் பிறரன்பு அமைப்பு, 1968 ஆம் ஆண்டில், அருள்பணி ஜோ பெர்னான்டோ அவர்களால்
உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.