மறைந்த முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் பிப்ரவரி 2022 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “மிக விரைவில் நான் என் வாழ்வின் இறுதி நடுவருக்கு முன்பாக என்னை நானே காணக் கூடும் என்று எழுதியிருந்தார். மேலும், இருந்தபோதிலும், எனது நீண்ட கால வாழ்வை நான் திரும்பிப்பார்க்கிறபோது, நான் பயப்படுவதற்கும் அஞ்சிநடுங்குவதற்கும் நான் ஒரு மிகப்பெரிய காரணத்தைக் கொண்டிருக்கிறேன். நான் நன்கு மகிழ்ந்திருப்பதைவிட, ஆண்டவர் ஒருவரே நீதியுள்ள நடுவராக மட்டுமின்றி, எனது பலவீனங்களுக்காக அவர்தாமே ஏற்கெனவே ஒரு நண்பராக, ஒரு சகோதரராக துன்புற்றிருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அங்ஙணமே எனது ஆலோசகரும் எனது பரிந்துரையாளருமான தூய ஆவியாரும் துன்புறுகிறார். நடுத்தீர்க்கப்படும் மணித்துளியின் ஒளியில், ஒரு கிறிஸ்தவராக இருக்கும் அருள்வரமானது எல்லாவற்றிற்கும் மேலாக எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அது எனக்கு அறிவையும், உண்மையில் என் வாழ்வின் நீதிபதியானவருடன் தோழமையையும் எனக்கு வழங்குகிறது. இப்படி, மரணம் என்னும் இருள்நிறை கதவின் வழியாக நம்பிக்கையுடன் கடந்துகோக என்னை அனுமதிக்கிறது” என்று எழுதினார்.