Namvazhvu
ஈராக் கர்தினால் சாக்கோ முஸ்லிம்களோடு நல்லுறவு கொண்டிருந்தவர்
Friday, 06 Jan 2023 07:21 am
Namvazhvu

Namvazhvu

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறையியல் தளத்தில் கத்தோலிக்கத் திரு அவைக்கு விட்டுச்சென்றுள்ள அனைத்தையும் வைத்து, அவர் ஒருநாள் திரு அவையின் வல்லுநராக அறிவிக்கப்படுவார் என்றும், அத்தகைய ஆழ்ந்த இறையியல் நிபுணத்துவம் உடையவர்கள் இக்காலத்தில் இல்லை என்றும் ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் சாக்கோ அவர்கள், இத்திருத்தந்தை, முஸ்லிம் உலகோடு ஆழ்ந்த உறவைக் கொண்டிருந்தார் என்றும், 2010 ஆம் ஆண்டில் மத்தியக் கிழக்கு குறித்து ஆயர்கள் மாமன்றம் நடைபெறுவதற்கு ஆதரவளித்தார் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், இஸ்லாம் மதத்தவரோடு வைத்திருந்த உறவில் ஓர் இறைவாக்கினராக இருந்தார் என்றும், தெளிவான மற்றும், புரிந்துகொள்ளக்கூடிய முறையில் காரியங்களை வெளிப்படுத்திய மிகப்பெரும் இறையியலாளர் என்றும் கர்தினால் சாக்கோ கூறினார்.

மேலும் இத்திருத்தந்தை, ஒளிவீசும் முகத்தைக்கொண்டுள்ள கடவுளின் மனிதர் என்றும் அவர்மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஈராக் மக்களோடு ஆழ்ந்த உடனிருப்பைக் கொண்டிருந்தார் மற்றும், மனித உறவுகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தினார் என்றும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், கடந்த சில நாள்களாக இத்திருத்தந்தைக்காக ஈராக் திரு அவை திருப்பலிகள் நிறைவேற்றி செபித்தது என்று தெரிவித்துள்ளார்.