மார்ச் 17 ஆம்
தேதி ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் அஞ்
ஞாயிறன்று வழங்கப்
பட்ட நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்ச்சியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் செப உரையை வழங்கினார். பாடுகள் மற்றும் மரணத்தின் பின்வரும் உயிர்ப்பின் வழியே, வானகத் தந்தை தன் மகனை மகிமைப்படுத்த விழைந்தது குறித்து, இயேசு, தம் சீடர் களுக்கு எடுத்துரைத்து, அவர்களைத் தயார் செய்ததை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, துன்பங்கள் குறித்து, கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கவேண்டிய கண்ணோட்டம் இங்கு உணர்த்தப்படுகிறது என்று கூறினார்.
துன்பங்கள் தேவையானவை, அதேவேளை, அவை, நாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்ல, உதவிகளாகவும் விளங்குகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார். நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும், தீர்வும், வெற்றியும் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தின் உதவியோடு, நாமும் இயேசுவுடன் மலைமீது ஏறிச்செல்ல வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
செபித்துக் கொண்டிருந்தபோது, இயேசுவின் முகத்தோற்றம் மாறியது என்பதை லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் நாம், செபத்தின் வழியாக நாமும் ஒளிர் விக்கப்பட்டு, பிறரையும் ஒளிர்விக்கமுடியும் என்பதை நினைவில் கொண்டு, இத்தவக்காலத்தில், நம் வாழ்வில் செபத்திற்கு தனியோர் இடமளிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.