புனித பெனடிக்ட் பிஸ்கோப் 628 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உயர் குடியில் பிறந்தார். அறிவாற்றல் மிகுந்த பெனடிக்ட் ஓஸ்வே அரண்மனையில் புகழ் மிக்க அமைச்சராக பணி செய்தார். அரண்மனை வாழ்வை துறந்து 666 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் துறவு இல்லத்தில் சேர்ந்தார். தனது பெயரை பெனடிக்ட் என்று மாற்றினார். துறவு மடத்தில் பாடலுக்கு சிறப்பு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். திருப்பயணங்கள் மேற்கொண்டார். உரோமை வழிபாட்டு முறைகளை ஆர்வமுடன் பின்பற்றினார். 669 ஆம் ஆண்டு, புனித பவுல் துறவு மடத்தின் மடாதிபராக பெறுப்பேற்றார். அரசரின் அனுமதியுடன் புனித பேதுருவின் பெயரில் துறவு மடம் நிறுவினார். திரு அவையின் பாரம்பரியங்களையும், வழிபாடுகளையும் எடுத்துரைத்தார். வாழ்வுதரும் இறைவார்த்தையை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். திருப்பயணங்களின் தந்தையான பெனடிக்ட் 690 ஆம் ஆண்டு, இறந்து புனிதரானார்.