மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில், ஷிர்பூர் விஷ்வ மண்டல் சேவாஷ்ரம் எனும் கத்தோலிக்க அரசு சாரா நிறுவனத்தில் பணி புரியும் தங்களது ஆசிரியர்கள், மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்று பொய் குற்றம் சாட்டப்பட்டு, ஓடும் இரயிலில் இந்துத்துவ அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தங்களது நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று கத்தோலிக்க குருவானவர் ஒருவர் மாவட்ட காவல்துறையின் பாதுகாப்பை கோரியுள்ளார்.
சனவரி 16 ஆம் தேதி, 14 பெண் ஆசிரியர்கள் உட்பட 42 ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா காரணமாக இரயிலில் பயணம் மேற்கொண்ட நேரத்தில் சாங்லி இரயில்வே நிறுத்தத்தில் ஏறக்குறைய 15 இந்துத்துவ அடிப்படைவாத இளைஞர்களால் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் ஆளானார்கள். இதில் 7 ஆசிரியர்கள் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள இரயில் நிலையத்தில் புகார் தர சென்றபோதும் இரயில்வே காவல்துறை அதிகாரி முன்பாகவே இவர்களை அச்சுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் அருகில் உள்ள ஒரு கத்தோலிக்க நிறுவனத்தில் அடைக்கலம் புகுந்தனர். “இது உண்மையில் ஒரு திட்டமிடப்பட்ட வெறித்தனமான தாக்குதல் என்று அருட்பணியாளர் கான்ஸ்டான்ஸியோ ரோட்ரிகஸ் தெரிவித்தார். தந்தை அவர்கள் ஒரு சில காரணங்களால், இந்தச் சுற்றுலாவில் பங்கேற்கவில்லை. இப்பகுதியில் இருக்கும் பழங்குடியின மக்களை மதமாற்றுவதாக பொய் குற்றம் சுமத்தி இவர்களைத் தாக்கியுள்ளனர். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக நாங்கள் கல்வியினை வழங்கப்படுகிறது. ஆனால், இதுவரை எவரையும் நாங்கள் மதம் மாற்ற முயற்சிக்கவில்லை. அவர்கள் விழிப்புணர்வு பெறுவதை விரும்பாத தீய சக்திகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.