Namvazhvu
அருட்பணியாளர் ஜோசப் அமுதக்கனி மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்றித்து செய்த செயல்
Wednesday, 01 Feb 2023 06:49 am
Namvazhvu

Namvazhvu

உரோமை கத்தோலிக்க திரு அவையும், பிற கிறிஸ்தவ சபைகளும் இணைந்து ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை ஒன்றிப்பு வாரத்தை கொண்டாடின. இந்த ஒன்றிப்பு வாரத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் இந்தியாவின் மத்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் பிற சபை கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து, பொய் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட கத்தோலிக்க குருவின் விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடியது பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அருட்பணியாளர் ஜோசப் அமுதக்கனி, ஜெபுவா மறைமாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். 49 வயதான இவர் தன்னுடைய பங்கின் கிளைபங்கு ஒன்றில் திருப்பலி நிறைவேற்ற சென்றிருந்த போது, இந்த கத்தோலிக்க குருவானவர் மாநிலத்தில் இருக்கும் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். மாநிலத்திற்கு முன்னறிவிப்பு எதுவும் அளிக்காமல், இங்கு வாழும் மக்களை ஏமாற்றி மதமாற்றுகிறார். மேலும் மக்களின் வீடுகளில் ஜெபம் செய்து அவர்களுக்கு விவிலியத்தை கொடுக்கிறார். இந்து மதத்தை விட்டுவிட்டு கிறிஸ்தவர்களாக மாறுங்கள் என கட்டாயப்படுத்துகிறார் என்று ஒரு சில இந்து அடிப்படைவாதிகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையும் உயர்மட்ட அரசியல்வாதிகளிடமிருந்து வந்த அழுத்தத்தால் தந்தையை இரவு எட்டு மணிவரை சிறைக்காவலில் வைத்திருந்தனர். பூசைப் புத்தகத்தை விவிலியம் என்று கருதி அதனைப் பிடுங்கிச் சென்றனர். இந்நிலையில் பங்கு மக்களும் பிறசபை கிறிஸ்தவர்களும் இணைந்து ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தந்தை அமுதக்கனியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 8 மணி நேரத்திற்கு பிறகு அருட்பணியாளரை விடுதலை செய்ததுகத்தோலிக்கர்களும் கத்தோலிக்கர் அல்லாதவர்களும் கிறிஸ்தவர்களாக இணைந்து ஒரு சேர மேற்கொண்ட இந்த முயற்சி கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கு சாட்சியாக அமைந்தது. இறைமக்கள்மக்கள், தந்தை அமுதக்கனியை தங்கள் தோளில் சுமந்துகொண்டு, காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக தேவாலயத்திற்கு அழைத்து சென்று, சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.