Namvazhvu
கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு மத்திய பிரதேச பள்ளிப் பாடங்களில் புராணங்கள்
Wednesday, 01 Feb 2023 07:19 am
Namvazhvu

Namvazhvu

இந்தியத் திரு அவை தலைவர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் இந்து மதத்தின் வேதங்களைப் பற்றிய பாடங்களை ஒன்றிய அரசு சேர்ப்பதற்காக வெளியிட்ட அறிக்கையை விமர்சித்துள்ளனர். ஜனவரி 23 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்து மதத்தின் வேதங்களான இராமாயணம், மகாபாரதம், வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை போன்றவற்றின் படிப்பினைகள், அரசு நடத்தும் பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்க பாடங்களில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து திரு அவை தலைவர்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், இது எதிர்வரவிருக்கும் தேர்தலுக்காக பாஜக நடத்தும் ஒரு திட்டம் என்று விமர்சித்தனர்.

இதுகுறித்து கத்தோலிக்கத் திரு அவையின் மக்கள் தொடர்பு செய்தியாளர் அருள்பணியாளர் மரிய ஸ்டீபன்நல்லொழுக்க பாடங்களில் மதத்தை குறித்த படிப்பினைகள் சேர்ப்பது தவறல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் படிப்பினைகளை மட்டும் சேர்ப்பது தவறு. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. எனவே இந்தியாவில் பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிற மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் போன்ற மதங்களின் படிப்பினைகளையும் சேர்ப்பதுதான் சரியானது என்று UCA செய்தி நிறுவனத்திடம் ஜனவரி 24 ஆம் தேதி தெரிவித்தார். ஜெபுவா மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பழங்குடியினத்தின் தலைவரான G.S. மார்கம்ஒன்றிய அரசு உண்மையில் இதை நடைமுறைப்படுத்த விரும்பினால், நாட்டில் இருக்கும் பிற மதத் தலைவர்களை அழைத்து, அவர்களோடு ஒரு கூட்டத்தை நடத்திய பிறகு, ஒரு புத்தகத்தை அமைப்பதை முடிவு செய்து அதை பயன்படுத்தலாம் என்று கூறினார். மாநிலத்தின் மக்கள் தொகையில் 20 லட்சம் மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினர் வாழும் இப்பகுதியில் கத்தோலிக்க மற்றும் பிறசபையைச் சார்ந்த 35000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களின் ஓட்டு வங்கியானது இருக்கிறது.