Namvazhvu
உலக நோயாளர்கள் நாள் நல்ல சமாரியர் போல மாறுவோம் - திருத்தந்தை
Thursday, 16 Feb 2023 08:48 am
Namvazhvu

Namvazhvu

நோயுற்ற மற்றும் துன்பப்படுகின்ற மக்களை நல்ல சமாரியரைப் போல அன்புடன் கவனித்துக் கொள்வோம் என்றும், இதன் வழியாகக் கடவுளின் மாதிரியை நாம் பின்பற்றுகின்றோம் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு குறுஞ்செய்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரி 11, சனிக்கிழமையன்று, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளும், நோயாளரின் உலக நாளும் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் குறுஞ்செய்திகளை, @VaticanIHD என்ற வலைத்தள முகவரியில் பதிவு செய்துள்ளார்.

"நல்ல சமாரியனைப் போல, நோயுற்ற மற்றும் துன்பப்படுகிற மக்களைக் கவனிப்போம். அனைத்து நோயாளர்களையும், அவர்களை அன்புடன் பராமரிப்பவர்களையும் லூர்து நகர் அன்னை மரியா ஆசீர்வதிப்பாராக" என்ற சொற்களை, ஹாஸ்டாக் உலக நோயாளர்கள் நாள் என்று முதல் குறுஞ்செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.

மேலும், "பாதிப்பு மற்றும் நோயின் அனுபவத்தின் வழியாக நாம் கடவுளின்  வழிகளான நெருக்கம், இரக்கம், மென்மை போன்ற வழிகளில் ஒன்றாக நடக்க முடியும்" என்ற சொற்களை ஹாஸ்டாக் லூர்து நகர் அன்னை என்று இரண்டாவது குறுஞ்செய்தியாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ஆம் யோவான் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட நோயாளரின் உலக நாள், இவ்வாண்டு 31வது முறையாக சிறப்பிக்கப்பட்டதை நினைவுறுத்தி, இவ்விரு குருஞ்செய்திகளையும் தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.