Namvazhvu
ஒன்றிணைவோம் கூட்டமைப்பு என்பது பெறுவதில் அல்ல கொடுப்பதில்தான் அடங்கியுள்ளது
Thursday, 16 Feb 2023 10:08 am
Namvazhvu

Namvazhvu

நிறுவனங்களைக் கையாளும் பல்வேறு நிலைகளில், நீங்கள் பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும், அறிவு, தொடர்புகள் மற்றும் அர்ப்பண உணர்வுடன் செயல்படும்போது நீங்கள் பொது நலனுக்காகக் கைகொடுப்பதிலும் சிறந்து விளங்குவீர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

பிப்ரவரி 13, திங்களன்று, ‘யூனியமோ’ அதாவது ஒன்றிணைவோம்’  என்ற அரிய நோய்களின் இத்தாலிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளர்களின் தேவையை உணர்ந்து செயல்படவும் அழைப்புவிடுத்துள்ளார்.

ஒன்றிணைவோம்என்ற உங்கள் கூட்டமைப்பின் விருதுவாக்கு, நாம் அனுபவங்களை ஒன்றிணைக்கிறோம், வலிமையை ஒன்றிணைக்கிறோம், நம்பிக்கைகளை ஒன்றிணைக்கிறோம் என்பவற்றை உள்ளடக்கியிருக்கிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் விளக்கினார்.

ஒரு தாயும் தந்தையும்  தங்கள் குழந்தைக்கு ஒரு அரிய நோய் இருப்பதைக் கண்டறிந்தால், அதே அனுபவத்தை அனுபவித்த மற்றும் அனுபவிக்கும் மற்ற பெற்றோரை அவர்கள் அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இது ஒரு தேவை, இதுவே அந்நோயைக் கையாளும் பணியாளர்களை ஒன்றிணைக்கும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.

பகிர்வின் பாதை என்பது ஒரு தேர்வாகிறது என்றும், இது இரண்டு செயல் நோக்கங்களால் ஆதரிக்கப்படுகின்றது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாவது செயல் நோக்கம், நமக்குத் தீவுகளை வழங்குகிறது என்றும், இரண்டாவது செயல் நோக்கம்மனித உறவுகளின் மகிழ்ச்சியிலிருந்து வருகிறது மற்றும், இது நாம் அன்புகொண்டுள்ள மக்களுக்கு நன்மை செய்யத் தூண்டுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

நலப்பணி என்பது, சொந்த நலனுக்கான தேவைகளைப் பெறுவதற்கான ஒரு அரசியல் தளம் அல்ல, மாறாக, இப்பணியில் யாரும் புறக்கணிக்கப்படாமலும், யாருக்கும் பாகுபாடு காட்டப்படாமலும், யாரும் தண்டிக்கப்படாமலும் போராடுவதை உள்ளடக்கியுள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் விவரித்தார்.