மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே மதச் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அந்த வகையில் 14.2 சதவீதம் உள்ள 17 கோடி முஸ்லீம் சிறுபான்மையினரையும் 2.3 கோடி கிறிஸ்தவச் சிறுபான்மையினரையும் மேலும் ஒடுக்கும் வகையில் அவர்களுக்கான நல நிதியில், குறிப்பாக உயர்கல்விக்கான உதவித்தொகையில் 38 சதவீதம் அதாவது பெரும்பங்கை குறைத்து தன் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 50.2 கோடியாக இருந்த உதவித்தொகை இந்த ஆண்டு 30.9 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதராசாக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகை 1.6 கோடியிலிருந்த 1 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ஏறக்குறைய 70 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுபான்மையின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். லவ் ஜிகாத், ஹிஜாப் என்று அரசியல் ரீதியாக தாக்குதல் தொடுத்தவர்கள் தற்போது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஆளும் இந்துத்துவ அரசு சிறுபான்மையினரை ஒரு பொருட்டாகவே மதிக்காத அவலத்திற்கு இது மற்றுமொரு எடுத்துகாட்டு.