Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் கடவுளுடைய மக்களின், ஒற்றுமைப் பிணைப்பு மரியா
Wednesday, 22 Feb 2023 10:56 am
Namvazhvu

Namvazhvu

மறைநூல், மற்றும் அப்போஸ்தலிக்க பாரம்பரியம் கொண்டு திருத்தூதர்களை செபச்சூழலில் அணைத்து காத்த இயேசுவின் தாயாம் அன்னை மரியா இன்று நம்மையும் எளிய வழியில் அழைத்து கடவுளுடைய மக்களாகிய நமது ஒற்றுமையின் பிணைப்பாக செயல்படுகின்றார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

பிப்ரவரி 13, திங்கள்கிழமை மெக்சிகோ மற்றும் ஸ்பெயினில் உள்ள இரண்டு திருத்தலங்கள் புனித குவாதலூப்பே அன்னை மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டு இணைக்கப்பட்டதற்கு மகிழ்வைத் தெரிவித்து டோலேடோ பேராயர் பிரான்சிஸ்கோ செர்ரோ சேவ்ஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும் கதவுகள் கொண்ட இல்லமாக, செபம், மற்றும் ஒற்றுமையின் இல்லமாக ஒவ்வொரு ஆலயங்களும் செயல்படவேண்டும் என்று அச்செய்தியில் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் புளிக்கரமாக இருக்க வேண்டும் என்று சவால் விடுக்கும் கன்னி மரியா இந்நோக்கத்திற்காகவே திருத்தலத்திற்கு வரும் மக்களை ஊக்குவிக்கிறார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மெக்சிகோவில் அதிக திருப்பயணிகளின் வருகையைக் கொண்ட புனித குவாதலூப்பே அன்னை திருத்தலமானது Extremadura பகுதியில் உள்ள Sierra de las Villuercas அடியில் அமைந்துள்ள ஸ்பெயின் நகர குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

714 ஆம் ஆண்டில் மூரிஷ் படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு, உள்ளூர் மக்களால் வணங்கப்பட்டு வரும் கன்னி மரியாவின் திருஉருவச்சிலை ஆடுமேய்க்கும் ஒருவரால் குவாதலூப்பே ஆற்றின் கரையில், கண்டுபிடிக்கப்பட்டது. அச்சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அன்னை மரியாவிற்கு ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டு, குவாதலூப்பே அன்னை திருத்தலம் என்றழைக்கப்பட்டு வருகின்றது.