Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் மனிதக் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்
Monday, 13 Mar 2023 10:36 am
Namvazhvu

Namvazhvu

இத்தாலியின் கலாபிரியா பகுதியில் குர்டோ நகர் அருகே கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தது குறித்து மீண்டுமொருமுறை தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.

மார்ச் 5 ஆம் தேதி தன் நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், இந்த அண்மைப் படகு விபத்து குறித்து மீண்டும் குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதர்களை பொருட்கள்போல் கடத்திச் செல்லும் இந்த நிலைகள் நிறுத்தப்படவேண்டும் எனவும், மனிதர்களை கடலில் வீசும் இந்த நிலை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

இத்தகைய துயர்நிறை விபத்துகளால் மத்திய தரைக்கடல் மீண்டும் இரத்தம் நிறைந்ததாக மாறவேண்டாம், நம்பிக்கையின் பயணங்கள் ஒருபோதும் மரணத்தின் பயணங்களாக மாறவேண்டாம் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் கலாபிரியா பகுதியில் இப்படகு விபத்திலிருந்து தப்பி பிழைத்தவர்களுக்கு வரவேற்பு அளித்து உதவிகளை ஆற்றிய அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார்.

மனித உயிர்களை கடலுக்குள் எறியும் இத்தகைய நிலைகள் இனி எப்போதும் இடம்பெற வேண்டாம் என்ற விண்ணப்பத்தையும் தன் நண்பகல் மூவேளை செபவுரையின் இறுதியில் முன்வைத்தார்.