Namvazhvu
திருத்தந்தை கிரகோரி புதிய சிறுகோள்களுக்கு இயேசு சபை குருக்களின் பெயர்கள்
Monday, 13 Mar 2023 13:04 pm
Namvazhvu

Namvazhvu

புதிய சிறுகோள்களுக்கு மூன்று இயேசு சபை அருள்பணியாளர்கள் மற்றும் ஒரு திருத்தந்தையின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

562971 Johannhagen, 551878 Stoeger, 565184 Janusz and 560974 Ugoboncompagni ஆகியவை வத்திக்கான் ஆய்வகத்தின் மூன்று வானியலாளர்கள் மற்றும் திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரி பெயரிடப்பட்ட நான்கு சிறுகோள்கள் ஆகும்.

திருத்தந்தை கிரகோரி, நாள்காட்டியின் சீர்திருத்தத்திற்கும் மற்றும் திருத்தந்தை வானியலாளர்கள் மற்றும் கண்காணிப்பகங்களின் பாரம்பரியத்தின் தொடக்கத்திற்கும் காரணமானவர் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மேலும் 1906 முதல் 1930 வரை வத்திக்கான் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த இயேசு சபை அருள்பணியாளர்கள் Johannhagen, வானியல் மற்றும் இறையியலாளர் Bill Stoeger, மற்றும், தற்போது வத்திக்கான் ஆய்வகத்தில் பணிபுரியும் Robert Janusz ஆகியோர் புதிய சிறுகோள்களுக்குப் பெயரிடப்பட்ட வானியலாளர்கள் ஆவர்.

இன்று முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகோள்கள் இயேசு சபை அருள்பணியாளர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. அவர்களில் அருள்பணியாளர் கிறிஸ்டோபர் கிளாவியஸ், இவர் திருத்தந்தை 13 ஆம் கிரகோரியால் காலண்டர் திட்டத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டார். அவருடைய பெயரில் அமைந்த சிறுகோள் ‘20237 கிளாவியஸ் என்று அழைக்கப்படுகிறது, மற்றும் அருள்பணியாளர் Giovanni Battista Riccioli (1598-1671). இன்றும் பயன்படுத்தப்படும் சந்திர பெயரிடல் முறையை உருவாக்கியவர் இவர்.