Namvazhvu
கிறித்தவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம்
Thursday, 20 Jun 2019 07:37 am

Namvazhvu

மார்ச் மாதம் 23 ஆம் தேதி மதுரை உயர் மறைமாவட்டத்தில் உள்ள நோபிலி அரங்கில் கிறித்தவ வாழ்வுரிமை இயக்க முன்னெடுப்பில் கிறித்தவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக தமிழக ஆயர் பேரவையின் தலைமையில் நடைபெற்றது. 
இதில் தமிழக ஆயர்கள் 14 பேரும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான துறவற சபைகளின் மாநில அன்னையர்கள், மாநில தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களிலிலிருந்து கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் பிரதி நிதிகள் என்று ஏறக்குறைய 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 
காலையில் ஜெப வழிபாட்டுடன் தொடங்கிய இந்த ஆய்வுக் கூட்டம் கருத்துரை யரங்கம், கலந்துரையரங்கம் விவாதம், தீர்மானம் என்று பல்வேறு அம்சங்களைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது. கிறித்
தவ வாழ்வுரிமை இயக்கத்தின் முன்னோடி
களில் ஒருவரான அருள்பணி. சேவியர்
அருள்ராஜ், பொதுநிலையினர் பணிக்குழு வின் செயலர் அருள்பணி. லுhர்துசாமி கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்
கிணைப்பாளர் அருள்பணி. சுந்தரி மைந்தன்
ஆகியோர் சிறப்பான கருத்துரைகள் வழங்கி நெறிப்படுத்தினர். கிறித்தவர்களின் அரசி
யல் நிலைப்பாடு குறித்த நூல் வெளியிடப்
பட்டது. பல்வேறு துண்டறிக்கைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
தமிழக ஆயர் பேரவையின் சட்டப் பணிக்குழு கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத் தோடு இணைந்து மிகச் சிறப்பாக இந்த அமர்வுகளை வழிநடத்தியது. இறுதியில் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் உறுதி
மொழியை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மேற்கொண்டனர். தமிழக ஆயர் பேரவையின் பல்வேறு பணிக்குழுக்களின் செயலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.