பொது முன்னுரை: இயேசுவில் பேரன்பிற்குரியவர்களே, இன்று நாம் குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இது திருப்பாடுகளின் ஞாயிறு எனவும் அழைக்கப்படுகின்றது. புனித வாரத்தின் நுழைவு வாயிலாக இந்நாள் அமைகின்றது. ’தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்னும் முழக்கங்களோடு எபிரேய மக்கள் ஒலிவக் கிளைகளைக் கைகளிலே ஏந்தி, எருசலேமிற்குள் எழுச்சிப் பயணம் மேற்கொள்கிறார்கள், இயேசுவின் இலட்சிய வாழ்வின் இலக்கை அடைவதற்கு, இந்தப் புரட்சிப் பயணம்தான் வழியமையத்துத் தருகிறது. விடுதலைக்காகவும் விடியலுக்காகவும் காத்திருந்த விளிம்புநிலை மக்களுக்கு நம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் வழங்குகிறது.
தங்கள் ஆதாயத்திற்காக பயணங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், பாதயாத்திரைகள் மேற்கொள்ளும் தன்னலமிக்க தலைவர்களுக்கு, இயேசுவின் தற்கையளிப்புப் பயணம் சவால் விடுகின்றது. இயேசு பதவியையும் புகழையும் பெறுவதற்காக எருசலேமிற்குள் நுழைய வில்லை. மாறாக, இறைவாக்கினர்களால் முன்னறிவித்தபடி, பாடு
களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொள்ளவே அங்கு செல்கின் றார். தன்னைக் கையளித்து நம்மை மீட்க்கின்றார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நாளை நினைவு கூரும் நாமும், இப்புனித வாரம் நம்மைப் புனிதப்படுத்தும் என்ற எதிர்நோக்கோடு இத்திருவழிபாட்டில் பங்கெடுப் போம். குருத்தோலைகளை ஏந்தியபடி, இயேசுவோடு பயணிப்போம்.
முதல் வாசக முன்னுரை: எசாயா 50:4-7
தந்தையாம் இறைவன் தேர்ந்தெடுத்த நல்ல ஊழியனாக இறைமகன் இயேசு விளங்குகின்றார். இறைவன், தாம் தேர்ந்தெடுத் தோரை அக்கறையுடன் பயிற்றுவிக்கின்றனர் என்பதையும் இடர்கள் வருகையில் உடனிருந்து வலுவூட்டி வழிநடத்துகின்றார் என்பதையும் எடுத்துக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்:22: 7-8. 16-17. 18-19. 22-23
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
இரண்டாம் வாசக முன்னுரை : பிலிப்பியர் 2:6-11
இறைத்தன்மையில் தந்தைக்கு இணையாக இருந்த இயேசு, நம்மீது கொண்ட பேரன்பினால் மனுஉரு எடுத்து மிகவும் இழிவாகக் கருதப்பட்ட சிலுவைச் சாவை ஏற்றுக் கொண்டார். நம் பாவங்களுக்காக அவர் கூனிக் குறுகி நின்றார். அவரின் தாழ்ச்சியின் பொருட்டு, தந்தை அவரை மாட்சிமைப்படுத்தினார். நம் புலன்களுக்கு புலப்படாத, இந்தப் பேருண்மையை எடுத்தியம்பும் இரண்டாம் வாசகத்தைக் கேட்போம் .
நற்செய்தி வாசகம்: லூக்கா 22:14 -23,56
1. இறைமக்கள் மன்றாட்டுகள் வழிநடத்தும் அன்பு தந்தாய்!
திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும். அவர்கள் பணி வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடன் இருந்து வலுவூட்டி அவர்களைக் காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆட்சி செய்யும் தந்தாய்!
புனித வாரத்தில் நுழைந்துள்ள கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு வாக்குப்பதிவு நாளான பெரிய வியாழக்கிழமையன்று கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய ஜனநாயகக் கடமை இருக்கிறது என்பதை உணர்ந்து, நாங்கள் தமிழக ஆயர் பேரவையின் வழிகாட்டுதலில் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டை மனத்தில் இருத்தி, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாத்து மதச்சார்பற்றதன்மையை நிலைப் படுத்தும் கூட்டணியைத் தேர்ந் தெடுக்கவும், எம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கருணைக் கடலே தந்தாய்!
கோடை விடுமுறை தொடங்
கியுள்ள இவ்வேளையில் விடு
முறையை குதுகாலத்துடன் கழிக் கும் மாணவ மாணவியர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியைத் தந்தரு ளும்படியாகவும் உயர்கல்விக்காக தங்களைத் தயாரிக்கும் மாணவ மாணவியருக்கு நல்வழி காட்டவும் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவியருக்கு நல் வெற்றி வாய்ப்பை நல்கிடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நிலைவாழ்வை வழங்கும் தந்தாய்!
வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் எம் தமிழகத்திற்காக மன்றாடுகிறோம். கோடை மழை வராதா? வாடிய பயிர் நிமிராதா? என்று வானத்தைப் பார்த்து ஏங்கும்
விவசாய பெருங்குடி மக்களுக்கும், குடிநீர் பஞ்சத்தால் வாடும் குடிமக் களுக்கு போதுமான மழையையும் தந்து எங்களைக் காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்களைப் புனிதப்படுத்தும் தந்தாய்!
புனித வாரத்தில் நுழைகின்ற நாங்கள், உமது பாடுகளையும், இறப்பையும் தியானித்து, எங்கள்
சிந்தனைகளிலும் செயல்பாடு களிலும் மாற்றம் கண்டு, உமது அருளின் துணையால் புதிய சமு தாயத்தை உருவாக்கி புனிதத்துடன் வாழும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.