Namvazhvu
கர்தினால் மாரியோ கிரேக் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆவணப் பணிகள் தொடக்கம்
Thursday, 20 Apr 2023 07:19 am
Namvazhvu

Namvazhvu

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆவணப் பணிகள் (Instrumentum Laboris) தொடங்கியுள்ளதாக வத்திக்கான் செய்தித் துறையிடம் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் கூறியுள்ளார்.

ஆயர் மாமன்றத் தலைமைச் செயலகம் ஏப்ரல் 12 முதல், அடுத்த வாரத்தில், 2021-2024 சினோடல் செயல்பாட்டின் பல்வேறு நிலைகளில் பங்கேற்க ஐந்து கண்டங்களைச் சேர்ந்த நிபுணர்கள் குழு வத்திக்கானில் உள்ள தலைமைச் செயலகத்தில் கூடுகிறது என்று, ஏப்ரல் 12 ஆம் தேதி, புதனன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கர்தினால் கிரேக் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் அனைவரும் கண்டங்கள் அளவில் உலக ஆயர்கள்  மாமன்றத்திற்கான ஏழு இறுதி ஆவணங்களை வடிவமைப்பதில் நேரத்தை செலவிடுவார்கள் என்றும் கர்தினால் கிரேக் கூறியுள்ளார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 4 முதல் 29 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்விற்கான ஆவணப் பணிகளைத் தொடங்குவதே இவர்களின் நோக்கம் என்றும், இந்த அமர்வு ஒரு சிறிய இறைவேண்டலுடன் தொடங்கும் என்றும் கர்தினால் கிரேக் குறிப்பிட்டுள்ளார்.