கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வணிக நிறுவனங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்த அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று இன்டர்-டெனாமினேஷனல் சர்ச் பெல்லோஷிப் என்ற கிறிஸ்தவ அமைப்பின் செயலாளர் ஜிதேந்திர ஃபவுலர் சிங் கூறினார்.
சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வணிக நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்து ஆதரவு கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளவேளை இவ்வாறு தெரிவித்த ஃபவுலர் சிங், இதுகுறித்து பஸ்தார் பிரிவு கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் மனு அளித்ததாகவும், அவர்களும் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் கூறினார்.
இந்தப் புறக்கணிப்பு குறித்த அழைப்பில், இந்து ஆதரவு தலைவர்கள் இந்துக்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிறுவனங்களில் தங்கள் இந்து அடையாளத்தை குறிக்க பலகைகளை வைக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்த ஃபவுலர் சிங், எந்தவொரு சமூகத்திற்கும் பொருளாதார புறக்கணிப்புக்கான இந்த வகையான அழைப்பு என்பது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகும் என்றும் கூறினார்.
தனது பெயர் வெளியிட விரும்பாத கிறித்தவ வியாபாரி ஒருவர் இதுகுறித்து கருத்துத் தெரிவித்தபோது, தனது உயர் சாதி வாடிக்கையாளர்களில் சிலர் இப்போது தனது கடைக்கு வருவதை நிறுத்திவிட்டனர் என்றும், அவர்கள் வழக்கமான வாடிக்கையாளர்களாக இருந்தனர், ஆனால், இப்போது அவர்கள் இந்துக்களுக்குச் சொந்தமான மற்ற கடைகளுக்குச் செல்வதைத் தான் காண்பதாகவும் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
போர்ட்-ஓ-பிரின்ஸ் உயர் மறைமாவட்டம் அதன் மக்களையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.