Namvazhvu
21.04.2019 பாஸ்கா ஞாயிறு
Thursday, 20 Jun 2019 08:42 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை
உயிர்த்த கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர்களே!
மற்றெல்லா நாள்களையும்விட இந்த நாள் வெற்றியின் நான் என்றும் அக்களிக்க வேண்டிய, அகமகிழவேண்டிய நாளென்றும் அழுத்தம் கொடுத்து மறைநூல் அழைப்பு விடுப்பது ஏன் என்ற வினா எல்லார் மனத்திலும் எதிரொலிக் கிறது. ஆம். கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவத்தின் பிறப்பு மட்டுமல்ல அதன் சிறப்பும் கூட. 
கிறிஸ்துவின் உயிர்ப்பு, என்றோ நடந்து முடிந்த ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, நாமும் ஒருநாள் நிச்சயம் உயிர்ப்போம் என்ற நிறை நம்பிக்கையை நமக்குத் தந்த நிகழ்வு. உயிர்ப்பு, மீட்பு என்ற வாழ்வு தரும், அருள் சுரக்கும் நிரந்தர வற்றாத ஊற்று. இதனை நமது உள்ளம் என்ற வயலில் பாய்ச்சி, உறவு என்னும் பயிர் வளர்த்து, விடுதலை வாழ்வு என்ற வெளிச்சம் பெறும் விளைச்சலுக்காண நாமெல்லாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமக்குள் மட்டுமல்ல
பக்கத்தில் உள்ளோர்க்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒளி
பகிரப்பட வேண்டும். அப்போதுதான் இந்நாளை வெற்றியின் நாள் என்று நாம் கொண்டாடி, அகமகிழ்ந்து அக்களிக்க முடியும். அதற்கு ஆண்டவர் கிறிஸ்துவின் விழுமியங்களை அறிதல் - அறிவித்தல் என்ற அணுகுமுறைகளைப் பின்பற்றி நம் உள்ளங்களும் இல்லங்களும் இறையாட்சியின் கருவிகளாகத் திகழ இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 10:34அ, 37-48
உண்மைக் கடவுளின் ஒரே மகனாகிய கிறிஸ்து சிலுவையில் கொல்லப்பட்டார். ஆனால் கடவுள் அவரை உயிர்ப்பித்தார். உயிர்த்த கிறிஸ்துவின் வாழ்வுக்குச் சான்று பகருமாறு தங்களுக்குக் கற்பித்தார் என திருத்தூதர் பேதுரு கூறுவதை முதல் வாசகத்தில் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-4
வாழ்வளிக்கும் கிறிஸ்து, மாட்சிமையில் தோன்றும் போது, அவரோடு இணைந்து, இன்புறும் வாழ்வில் நிலைக்க நாம் எப்போதும் மேலுலகு சார்ந்தவற்றை நாடவேண்டுமென கொலோசைய மக்களுக்கு திருத்தூதர் பவுல் எடுத்துரைத்து அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமாகக் கேட்போம்.
நற்செய்தி வாசகம்: யோவான் 20: 1-9
1. சான்று வாழ்வில் ஊன்றி நிற்கக் கற்பிக்கும் இறைவா!
எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர், திரு நிலையினர் அனைவரும் உண்மை, நன்மை போன்றவற்றை உள்ளடக்கிய அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆண்டவர் இயேசுவுக்கும் சான்று பகரும் உறுதியான உள்ளம் பெற்று துணிவுடன் பணிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியை வெற்றிபெறச் செய்யும் இறைவா!
 நடைபெற்றுக் கொண்டிருக் கும் நாடாளுமன்றத் தேர்த
லில், மக்கள் எந்தச் சூழலுக்கும் அடிமையாகாமல் நன்மை செய்வோருக்கே துணிந்து வாக்களிக்கவும், ஜனநாயகம், மதசார்பின்மை ஆகியவற்றின் நலம் பேணும் கூட்டணியையே வெற்றிபெறச் செய்யவும், வன்முறைகள் - தில்லு முல்லுகள் ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்று நல்ல முடிவுகள் வெளியாகவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளி வழங்கும் உன்னத இறைவா!
உம் திருமகனது உயிர்ப்புப் பெருவிழாவை உள்ளார்ந்த பக்திச் சூழலில் கொண்டாடும் நாங்கள், இப்பெருவிழாவிற்கு எங்களைத் தயாரிப்பதற்கு மேற்கொண்ட நல்ல அணுகுமுறைகளையும், செயல்பாடுகளையும் விட்டுவிடாமல் தொடரவும் எங்கள் குடும்பமும், நிறுவனங்களும் உறவில் மேம்பட நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆசியளிக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றுரைத்த இறைவா!
எங்கள் பங்கு மக்கள் அனைவரும் உம் அருளோடு தாங்கள் தேடும் தங்கள் பிள்ளை களுக்கு நல்ல கல்வி நிலையம், பயிற்சி நிலையங் கள், வேலை வாய்ப்பு, தொழில், வெளிநாட்டுப் பயணம், வாழ்க்கைத் துணை இவற்றுடன்  எமக்கு
இயற்கைப் பாதுகாப்பு, நல்ல மழை மற்றும் வன்
முறையற்ற சூழல் ஆகியவற்றை வழங்கி நாங்கள்
வளமுடனும் பாதுகாப்புடனும் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.