Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்
Wednesday, 02 Aug 2023 10:02 am
Namvazhvu

Namvazhvu

இளையோரும், முதியோரும் தங்களுக்குரிய கொடைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, ஒன்றிணைந்து வாழ உதவும் நோக்கத்தில், ஒருவருக்கொருவர் செவி மடுக்கவும், ஒருவரோடு ஒருவர் உரையாடல் நடத்தவும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கவும் முன்வர வேண்டும்.”

- ஜூலை 23, உலக தாத்தா-பாட்டிகள் தினத்திற்கான செய்தி

தீமை என்பது நமக்கு வெளியே மட்டும் இல்லை; நமக்குள்ளேயும் காணப்படுகிறது என்பதை உணர்ந்து, அதனை எதிர்கொள்ள வேண்டும். தீமைகளைக் காணும்போது, அவைகள் குறித்து நாம் பொறுமையை இழக்காமலும், அவைகளைக் களைவதில் வன்முறை வழிகளைக் கையாளாகாமலும் செயல்பட வேண்டும் .”

- ஜூலை 23, ஞாயிறு மறையுரை

மற்றவர்களைப் பற்றிய அவசரத் தீர்ப்புகளை வழங்கி, அவர்களின் பலவீனங்களில் கவனம் செலுத்தி, அவர்களின் நன்மைத்தனங்களைக் கண்டுகொள்ளாமல் விடும் சோதனையிலிருந்து நாம் விலகி நிற்போம். நம் இதயத்தில் காணப்படும் களைகளைக் கண்டு கொண்டு, அவைகளை இறைவனின் கருணை எனும் நெருப்பில் இடுவோம்.”

- ஜூலை 23, மூவேளைச் செப உரை

முதியோர்களை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாதுநமது குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அவர்களின் இருப்பு விலைமதிப்பற்றது. நாம் அனைவரும் ஒரே பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். நமது  வேர்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள மக்களின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை அவர்களின் இருப்பு நமக்கு நினைவூட்டுகின்றது.”

- ஜூலை 22, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

நமது தாத்தாவும்-பாட்டியுமே நமக்குக் கதாநாயகர்கள்! ஞானம் நிறைந்த அவர்களுடன் எப்போதும் உரையாடுவது அவசியம்.”

- ஜூலை 19, குழந்தைகளுக்கான கோடை முகாம்

நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், அது தேங்கி நோய்வாய்ப்படும். ஆனால், ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல் நதிபோல தொடர்ந்து பயணிக்கும் திரு அவை எப்போதும் பலம் பொருந்தியதாகவே இருக்கின்றது.”

- ஜூலை 18, பிரேசில் நாட்டிற்கான  காணொளிச் செய்தி