25.02.2019 காலை 11 மணியள வில் சிவகங்கை மறை மாவட்ட அளவில் தென்மண்டல இந்தோ-திபெத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உயர்திரு ஆஸ்டின் எப்பன் னுச. திருமதி நான்சி எப்பன் ஆகியோருக்கு சிவகங்கை வியான்னி அருட்பணி மைய வளாகத்தில் மேதகு ஆயர்.ஜெ.சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு மாண்புமிகு கதர் மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். பணி. ஆரோக்கியசாமி வரவேற்புரை வழங்கினார்.
இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய மேதகு ஆயர் ஜெ. சூசைமாணிக்கம் விழாநாயகர் தம்பதியரை பாராட்டி, வாழ்த்துரை வழங்கி, பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்ட இம்மறை மாவட்ட பொருளாளர் பணி. சந்தியாகு மறை மாவட்டக் கல்விப் பணி இயக்குநர் பணி. இருதயராய் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் பணி. ஜான் வசந்தகுமார் மான்போர்ட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சகோ, ஜோசப் அமல அவை மண்டலத்தலைவி அருட்சகோதரி அல்போன்சா, சோழபுரம் சாந்தா கல்லூரி செயலர் சகோ. மார்சியானா சிவகங்கை பங்கு காணிக்கை அன்னை சபை தலைவி சகோ. அமலா, புனித வளனார் மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியை சகோ. ஜோஸ்பின் கிளாரா சிவகங்கை பங்கு பேரவை உபதலைவர் திரு அருள்தாஸ், அந்தோ திபெத் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நம் வாழ்வு வார இதழ் பொறுப்பாளர் திரு. கங்கை அமல் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கி பரிசுகள் வழங்கினார்கள். விழா நாயகர் ஏற்புரைக்குப் பின் இவ்விழாவின் ஒருங் கிணைப்பாளர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் அன்பின் விருந்தில் பங்கேற்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ கங்கை வியான்னி அருட்பணி மைய இயக்குநர் பணி ஆரோக்கியசாமி, சிவகங்கை சமுதாயக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜார்ஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.