“அன்னை மரியா தன் உறவினர் எலிசபெத் அம்மாவிற்கு உதவ, உடனடியாகப் புறப்பட்டு விரைந்து சென்றார். இச்செயலானது இன்றைய இளையோர்க்கு உள்மன வீரியம், கனவுகள், உற்சாகம், நம்பிக்கை, பெருந்தன்மை ஆகியவற்றைப் புதுப்பிக்க அழைப்பு விடுக்கின்றது.”
- ஜூலை 31, உலக இளையோருக்குச் செய்தி
“மனித குலத்திற்கான உணவாக இறைவன் வழங்கிய கொடையாகிய தானியத்தைப் போர் வழியாக அழிப்பது என்பது இறைவனையே அவ மதிப்பதாகும். பசியால் துயருறும் பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல் விண்ணை நோக்கி எழும்பியுள்ளது.”
- ஜூலை 31, இரஷ்ய கூட்டமைப்புக்கு அறிவுறுத்தல்
“மனிதர்கள் வணிகப் பொருள்களாகக் கடத்தப்படுவதால், குழந்தைகள், பெண்கள், பணியாளர்கள் என எண்ணற்றோர் சுரண்டப்பட்டு, பாராமுகத்தை எதிர்நோக்குகின்றனர்.”
- ஜூலை 30, உலக நண்பர்கள் தினச் செய்தி
“தன் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்திற்கு அர்த்தத்தை வழங்கும் செல்வத்திற்காகத் தனக்கு உள்ளதையெல்லாம் விற்று, அதனை அடையும் வணிகர்போல், நாமும் நம் வாழ்வின் விலை உயர்ந்த முத்தான இயேசுவை நம்மோடு இணைத்துக்கொள்ள, நமக்குரியதையெல்லாம் இழக்கத் தயாராக இருப்போம்.”
- ஜூலை 30, ஞாயிறு மூவேளை செபவுரை
“பெருமளவில் பாதித்து வரும் எண்ணற்றப் போர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் மத்தியில், நீதியைப் பாதுகாக்கவும், நட்புணர்வுடன்கூடிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.”
- ஜூலை 29, கொரியாவிற்கான செய்தி
“கடவுள் உங்கள் ஒவ்வொருவரிடமும் அன்பின் திட்டத்தை வைத்திருக்கிறார். ஆகவே, அவருடைய திருவுளம் குறித்து அச்சமடைய வேண்டாம். ஆனால், அவருடைய அருளில் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.”
- ஜூலை 29, மெட்ஜுகோர்ஜே இளையோருக்கான செய்தி