திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர்களே!
இன்றைய உலகில் ’தனிமை’ என்பது பெருந்துன்பமாகக் கருதப்படு கிறது. அதைப்போக்க ’உடனிருப்பு’ என்ற ஒப்பற்ற கொடை தேவைப்படுகிறது. அந்த உடனிருப்பின் அருமையை உணர்ந்த
வர்கள் தனிமையிலிருந்து தாங்கள் விடு படுவதோடு, தனிமையில் தவிப்பவரோடு உடனிருந்து அவர்களை ஆற்றுப்படுத்தி, ஆட்கொள்வார்கள். இது ஒருவரது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் உன்னத செயல்பாடு. இன்றைய திருவழி பாட்டுக் கொண்டாட்டம் திருத்தூதர்கள் தங்கள் பணிவாழ்வில் தலைமை ஏற்று இறைவனோடும் ஏனைய அமைப்புகளோடும் மக்களை ஒப்புரவாக்கும் அரும் செயலை ஆற்ற அழைக்கப்படுவதை வெளிப்படுத்து கிறது. அந்த ஒப்புரவுப் பணிக்கு முதன்மையானதும் முக்கியமானதுமாக கருதப்படுவது நம்பிக்கை. அந்த நம்பிக்கை அரும்பி, வேரூன்றிய திருத்தூதர் தோமாவின் நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அதன் வழி யாகக் கண்டு நம்புவதைவிட காணாமலே நம்பி வாழும் பேறுபெற்ற நிலைக்கு நாம் அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வில் தனிமை தலைதூக்காமல், இறைவனுடன் உடனிருந்து, ஒப்புரவுப்பணியில் நாம் சிறந்து விளங்க இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 5:12-16
நலம் வழங்குவதையே இயேசு தம் வாழ்வின் இலக்காகக் கொண்டிருந்தார். எனவேதான் பாவம், அடிமை, நோய், சாவு இவற்றினின்று மக்களுக்கு விடுதலை வழங்குவதில் அவர் ஆர்வம் காட்டினார். அவரது திருத்தூதர்களும் அவரது ஆற்றலால் நலம் தரும் நாயகர்களாக விளங்கினார் என்பதை எடுத்துக் கூறும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 118: 2-4, 22-24, 25-27
பதிலுரை: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
இரண்டாம் வாசக முன்னுரை:
திருவெளிப்பாடு 1:9-11, 12-13, 17-19
திருத்தூதர் ஒருவரது வாழ்வும் பணியும் ஒரு வரலாறாக மாற வேண்டும். அதற்கு அவர் வழியாக வெளிப்படும் அனைத்து நிகழ்வுகளையும் எழுதிவைக்க வேண்டும் என்று தனக்கு மாட்சிமையின் சுடரொளியான கிறிஸ்துவிடமிருந்து வந்த அழைப்பை திருத்தூதர் யோவான் பகிர்ந்து கொள்ளும் இரண்டாம் வாசகத்துக்குச் செவிகொடுப்போம்.
நற்செய்தி: யோவான் 20:19-31
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. ஒப்புரவு நல்கும் உன்னத இறைவா!
எம் திருஅவைப் பணியாளர்கள் அனைவரும்
இன்றைய உலகின் முதன்மைப் பணியாகக் கருதப் படும் ஒப்புரவுப் பணிக்குத் தங்கள் வாழ்வில் முக்கியத் துவம் கொடுத்து, தனிமை,
இறைவனது உடனிருப்பை உணராமை, ஊனியல்பு களுக்கு அடிமையாகி மனித நேயத்தை வாழ்வாக்க முன்
வராமை ஆகிய நிலைகளில் உள்ளோரை விடுவிக்கும் பணியில் ஈடுபட வேண்டு
மென்று உம்மை
மன்றாடு கிறோம்.
2. விடுதலை வழங்கும் விண்ணகத் தந்தையே!
எம் நாட்டுத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அமைதி யின் தூதுவர்களாக விளங்கவும், எங்களை அடிமைப்படுத்தும் நபர்கள், சூழல்கள் ஆகிய
வற்றிலிருந்து நாங்கள் விடுபட்டு நல் வாழ்வு வாழ எங்களுக்கு வழிகாட்டவும் முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வளிக்கும் வள்ளலான இறைவா!
உம் திருமகனின் உயிர்ப்புக் காலத்தைக் கொண்டாடும் எம் பங்குக் குடும்பங்கள்
அனைத்தும் பாஸ்கா காலக் கடமைகளைச் சரிவரச் செய்யவும் குறிப்பாக சமாதானம், உறவு வாழ்வு, உடல்நலம், கல்வி, வேலை வாய்ப்பு, நல்விளைச்சல், உணவு-உடை-உறைவிடம் ஆகியவற்றைப் பெற்று வாழ்வாங்கு வாழவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பே உருவான இறைவா!
கோடைக்கால விடுமுறை தொடங்கும்
இக்காலத்தில் எம் குடும்பத்துப் பிள்ளைகள்
நேரத்தை வீணாக்கும் எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் பயிற்சிகள், பணிகள் ஆகிய வற்றைச் சரிவரச் செய்யவும் தீயனவற்றைத் தூவும் அலைபேசி, முகநூல், சுட்டுரை, வாட்ஸ்ஆப் போன்ற தொடர்பு ஊடகங்களை விழிப்புணர்வுடன் பயன்படுத்தவும் முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் செயல்களை நிர்ணயிக்கும் இறைவா!
எங்கள் பகுதியில் ஊர் பாதுகாவலர் விழாக்கள், பள்ளி மற்றும் நிறுவனங்களின் விழாக்கள் நடைபெறத் தொடங்கும் இக்காலத் தில் அந்த மக்கள் விரும்பும் நலன்கள் அனைத்தை
யும் வழங்கி மகிழச் செய்யும் அதேவேளையில் அவர்கள் அதற்குத் தகுந்த ஆன்மிக தயாரிப்பில் ஈடுபடவும் பாரம்பரியம் என்றப் பெயரில் வீணான ஆடம்பரங்களில் ஈடுபடாமல் அவற்றைக் குறைத்து மனித மாண்பை வெளிப்படுத்தும் தருமச் செயல்களில் அதிகம் ஈடுபடவும் விழிப்புணர்வு பெற்று செயல்படவும் முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். (ஏக்ஷளு தங்கள் பங்கில் வெற்றிகரமாக நடக்க சிறப்பு வேண்டல் எழுப்பலாம்)