“கடல்மீது நடப்பதற்கான அழைப்பை ஏற்று, நீரின்மீது நடந்த புனித பேதுரு, கடலில் மூழ்கவிருந்த வேளையில் இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’எனக் கூக்குரலிட்டதைப்போல், நாமும் தீமைகள் மற்றும் அச்சங்களிலிருந்து நம்மைக் காக்க வல்ல இயேசுவை நோக்கி, நம்மைக் காக்கும்படி அழைப்பு விடுப்போம்.”
- ஆகஸ்ட் 13, ஞாயிறு மூவேளை செபவுரை
“நமக்கு எதிராகச் செல்லும் சீற்ற அலைகள் மற்றும் புயலைக் காட்டிலும், இயேசு சக்தி நிறைந்தவர் என்பதை நாம் நம்புகின்றோமா? நம் துன்ப வேளைகளில் அவரை நோக்கி நம் குரலை எழுப்புகின்றோமா?”
- ஆகஸ்ட் 13, ஞாயிறு மறையுரை
“அன்பான இளையோரே, பெரிய கனவு காண்பதற்கும், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குமான துணிவை ஒருபோதும் இழக்காதீர்கள்! பாதுகாப்புக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு, அதை உலகம் முழுவதும் பரப்புங்கள்; உடன்பிறந்த உறவின் வெற்றியாளர்களாக மாறுங்கள்; கடவுள் மற்றும் நல்ல ஆலோசகர்களால் வழிநடத்தப்படுவதன் வழியாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.”
- ஆகஸ்ட் 12, இளையோருக்கான
குறுஞ்செய்தி
“இயேசுவின் அன்பின் இயக்கத்தினால், மற்றவர்களைச் சந்திக்கச் செல்வோம்; நற்செய்தி அறிவிப்பிற்கான புதிய பாதைகளைக் கண்டுபிடிக்கும் துணிவுடன் பணிசெய்யப் புறப்படுவோம்.”
- ஆகஸ்ட் 11, கீழைத் திரு அவைக்கான செய்தி
“நம் செயல்கள் வழியாகப் பிறரை அன்புகூர்கின்றோம். அவ்வன்பே நம்மை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கின்றது. பிறரை அன்புகூரும் எவரும், இயேசுவின் பெயரால் ஊழியம் செய்வதன் வழியாக மற்றவர்களை அடைய விரைகிறார்கள்.”
- ஆகஸ்ட் 10, ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி
“ஏழ்மை, அநீதி மற்றும் போரால் சிதறுண்டு துண்டாக்கப்பட்டுள்ள இவ்வுலகிற்கு, கடவுள் மட்டுமே தரவல்ல குணப்படுத்துதலுக்காகவும், அமைதிக்காகவும், மனந்திரும்புவதற்காகவும், நற்செய்தியைப் பரப்புவதற்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம்.”
- ஆகஸ்ட் 9, புதன் மறைக்கல்வி