“அருள்பணியாளர்கள் தங்களது பிரச்சினைகளை மூடி மறைக்காது, அதனை உரியவர்களிடம் தெரிவித்து, அதற்கான தீர்வினைக் காண முயல வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அது அவரது தவறே அன்றி, அவர்கள் சார்ந்திருக்கும் சபையையும், சமூகத்தையும் சார்ந்ததல்ல.”
- ஆகஸ்டு 29, இயேசு சபையினருடன் கலந்துரையாடல்
“போதைப்பழக்கத்திற்கு அடிமையாகுபவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் உறுதியான அனுபவங்கள், தனிமையின் கதைகள், வேறுபாடு, ஒதுக்கப்படுதல், ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை உள்ளன. நம் அருகில் வந்து நம் காயங்களைக் குணப்படுத்திய இயேசுவைப் போல, நாமும் போதைப்பொருள் அடிமைத்தனத்தில் துன்புறுபவர்களுக்கு உதவ வேண்டும்.”
- ஆகஸ்டு 28, உரோம் தடயவியல் துறைக்கான செய்தி
“இறைவனைச் சந்திப்பதன் அடையாளம் மகிழ்ச்சி. சோகம் மற்றும் பயம், கடவுளிடமிருந்து நம்மைத் தொலைவில் வைக்கும் அடையாளங்கள். இறைவனிடம் இருந்து விலகி இருப்பவர்கள், தங்களிடம் ஏராளமான உடைமைகள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.”
- ஆகஸ்டு 28, திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி
“கிறிஸ்து கடந்த காலத்தின் நினைவு அல்ல; மாறாக, நிகழ்காலத்தின் கடவுள்! இயேசு உயிருடன் இருக்கிறார்; நம்முடன் இருக்கிறார்; அவர் நம் பக்கத்தில் இருக்கிறார்; அவருடைய வார்த்தையையும், அவருடைய அருளையும் நமக்குத் தருகிறார். அது நம்மை ஒளிரச் செய்து, மீட்டெடுக்கிறது.”
- ஆகஸ்டு 27, ஞாயிறு மூவேளைச் செபவுரை
“கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணம் கடினமாகவும், உயரமாகவும், மிகவும் செங்குத்தாகவும் தோன்றும் போது நாம் சோர்வடைய வேண்டாம். இயேசு நம் பலவீனங்களை ஏற்று, முயற்சிகளைப் பகிர்ந்துகொண்டு, நமது தோள்களில் உறுதியான மற்றும் மென்மையான அவரது கரத்தை வைத்து, நம்முடன் நடக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்வோம்.”
- ஆகஸ்டு 27, ஞாயிறு மறையுரை
“நல்லிணக்கத்தின் விதைகளை விதைப்பவர்களாகவும், அச்சங்களைக் கனவுகளால் மாற்றும் துணிவு கொண்டவர்களாகவும், அமைதியான நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளைக் காண்பவர்களாகவும் இளையோர் இருக்க வேண்டும். நம்பிக்கை, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக இளையோர் திகழ வேண்டும்.”
- ஆகஸ்டு 25, இரஷ்ய இளையோருக்கான காணொளிச் செய்தி