Namvazhvu
அல்ஸ்ஹைமர் எனப்படும் மறதிநோய் நோயாளிகள் கிராமத்தில் திருத்தந்தை
Monday, 24 Jun 2019 06:53 am

Namvazhvu

ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, அல்ஸ்ஹைமர் எனப் படும் மறதிநோய் நோயாளிகள்  பராமரிக்கப்படும், உரோம் நகரின் இம்மானுவேல் கிராமத்திற்கு (ஏடைடயபபiடி நுஅயரேநடந), திருத்தந்தை பிரான்சிஸ் சென்று அந்நோயாளிகளையும், அவர்
களைப் பராமரிப்பவர்களையும் சந்தித் தார். திருத்தந்தையின் இந்த இரக்கச் செயல் பற்றி அறிவித்த திருப்பீடச் செய்தித் தொடர்பகம், உரோம் நகரின் புறநகரிலுள்ள அந்தக் கிராமத்திற்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி திருத்
தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற
தன் வழியாக, சமுதாயத்தில் அடிக்கடி
மறக்கப்படும் அல்ஸ்ஹைமர் நோயாளி கள் அனுபவிக்கும் தனிமை மற்றும் ஒதுக்கப்படும் நிலை குறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தினார் என்று கூறியது.
மனிதரின் ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்நோயாளிகளின் தேவைகள் மற்றும் அவர்களின் மாண்பு மதிக்கப்படுவது பற்றியும், அந்நோயாளிகளுக்கு நெருக்க
மாக இருக்கின்றவர்கள் பற்றியும், விழிப்புணர்வு அதிகம் தேவைப்படு கின்றது என்பதைக் காட்டுகின்றது என திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் கூறியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் திருஅவை கடைப்பிடித்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் மேற்கொண்ட வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களை, திருத்தந்தை தொடர்ந்து ஆற்றி வருகிறார்.
இங்கு வாழ்கின்ற நோயாளிகள், பல்பொருள் அங்காடியிலும், சமையல் அறையிலும், உதவி செய்யலாம். இங்கு, மருத்துவர்கள், உடல்
உறுப்புகளுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சையளிப்பவர்கள், பல்வேறு நலவாழ்வு பணியாளர்கள் உள்ளனர். இந்நோயாளிகளுக்கு அனைத்துமே இலவசமாக அளிக்கப்படுகின்றன.