Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் (நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)
Wednesday, 27 Sep 2023 11:05 am
Namvazhvu

Namvazhvu

மருந்தகப் பணி என்பது ஒரு தொழில் அல்ல; மாறாக, அது ஒரு மறைப்பணி. ஏனெனில், மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மருந்துகளை வழங்கும் தங்கள் கைகளின் வழியாக, துணிவு, அருகிருப்பு ஆகியவற்றை வழங்குகின்றார்கள்.”

- செப்டம்பர் 18, வத்திக்கான் மருந்தகத்தின் 150வது ஆண்டு விழா

நீங்கள் செபத்தில் நிலைத்திருக்கவில்லை என்றால், எங்கு செல்வது என்று உங்களுக்குத் தெரியாது. எனவே, ஒவ்வொரு நாளும் ஆண்டவருடன் நீண்ட உரையாடலில் ஈடுபடுவது மிக முக்கியம்ஒவ்வொரு முக்கியமான நிகழ்வு, நேரம், சந்திப்பு, தொடக்கம், முடிவு என அனைத்திலும் இறைவனை நோக்கிச் செபிக்க வேண்டும்.”

- செப்டம்பர் 18, வத்திக்கான், அருள்சகோதரிகளுக்கான உரை

மன்னிப்பு என்பது வெறுப்பால் மாசுபட்ட காற்றைச் சுத்திகரிக்கும் ஆக்ஸிஜன் போன்றது. இது வெறுப்பின் நச்சுத்தன்மையைக் குணப்படுத்தும் மருந்து; கோபத்தைத் தணிக்கும் வழி மற்றும் சமூகத்தை மாசுபடுத்தும், பல இதய நோய்களைக் குணப்படுத்தும் வழி.”

- செப்டம்பர் 17, ஞாயிறு மூவேளைச் செப உரை

காவல்பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கும், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் மட்டுமே அழைக்கப்படவில்லை; மாறாக, தாங்கள் வாழ்கின்ற சமூகத்தை நீதி மற்றும் மனிதாபிமானமுடையதாக மாற்றுவதற்காகவும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.”

- செப்டம்பர் 16, இத்தாலிய இராணுவப் படைக்கான உரை

நற்செய்தி நம்மைப் பிரிக்கவில்லை; மாறாக, ஒன்றிணைக்கிறது. நம் சொந்தக் கலாச்சாரம்வரலாறு, மென்மை, சேவை மனப்பான்மையுடன், மோதல்களை உருவாக்காமல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அது நம்மை உந்தித் தள்ளுகிறது.”

- செப்டம்பர் 16, கொரிய திருப்பயணிகளுக்கான உரை

நாம் இறைவனிடம் நெருங்கிய உறவு கொண்டிருக்கும்போது, நம் வாழ்வு நம்மைத் துன்பங்களிலிருந்து விலகியிருக்கவிடுவதில்லை. மாறாக, நன்மைத் தனத்தின் தொடுவானத்தை நமக்குத் திறந்துவிட்டு, அதன் முழுமையை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது என்பதை வியாகுல அன்னை நமக்குக் கற்றுத் தருகிறார்.”                                                         

- செப்டம்பர் 15, ‘டுவிட்டர்செய்தி