Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் (நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)
Tuesday, 03 Oct 2023 09:45 am
Namvazhvu

Namvazhvu

நாம் சந்திக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்பு என்று நம்பிக்கை கொண்டால் உலகம் மாறும். துன்புறும் அவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் துன்பத்திலும், வெரோணிக்கா கிறிஸ்துவின் முகத்தைத் துடைத்த துணியில் பதிந்த அவரின் முகத்தைக் காண்கின்றோம்.”

- செப்டம்பர் 26, இலத்தீன் அமெரிக்கச் சிறார் பாதுகாப்புச் சங்கத்திற்கான உரை

நம்மை மன்னிக்கின்ற, குணப்படுத்துகின்ற, மீட்கின்ற இயேசுவோடு உரையாடி, அவரது வார்த்தைகளைக் கேட்போம். நம்மீது கொண்ட அன்பிற்காகத் தம் உயிரையே கையளித்த இயேசுவின் அன்பைவிடப் பெரிய அன்பு இவ்வுலகில் எதுவுமில்லை என்பதைப் பாடுபட்ட இயேசுவின் திருமுகம் உணர்த்துகின்றது.”

செப்டம்பர் 25, இத்தாலி பாதுகாப்புப் படைக்கு உரை,

கடவுள் மிகவும் தாராள மனப்பான்மையுடன் இருப்பதால், அனைவருக்கும் ஒரு தெனாரியத்தைக் கூலியாகக் கொடுப்பதன் வழியாக அவருடைய அன்பை வெளிப்படுத்துகின்றார். ‘அவரவர்களுக்குத் தகுதியானதைக் கொடுங்கள்என்று கூறுவது மனித நீதி. ஆனால், அனைவருக்கும் சமமாகக் கொடுப்பது கடவுளின் நீதி.”

- செப்டம்பர் 24, ஞாயிறு மறையுரை

இடம்பெயர்தல் என்பது முழுமனச் சுதந்திரத்துடன் எடுக்கப்பட்ட ஒரு தேர்வாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாயத் தீர்வாக இருக்கக்கூடாது. இடம்பெயர்ந்து நம் கதவுகளைத் தட்டும் சகோதர-சகோதரிகளை வரவேற்கவும், ஊக்குவிக்கவும், உடன் செல்லவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.”

- செப்டம்பர் 24, ஞாயிறு மூவேளைச் செபவுரை

இயேசுவின் பார்வை நம் அனைவரையும் மென்மையாக அரவணைக்கும் பார்வை. அவர் நம்மை தலைமுதல் பாதம்வரை தீவிரமாக உற்றுநோக்குகிறார், தீர்ப்பிடுவதற்காக அல்ல; மாறாக, தாழ்நிலையில் இருந்து உயர்த்துவதற்காக.”

- செப்டம்பர் 23, மர்சேய்ல் திரு அவைக்கான செய்தி

திரு அவையும், பொது சமுதாயமும் ஏழைகளின் மௌன அழுகுரலுக்குச் செவிமடுக்கத் துவங்கட்டும்சமுதாயத் தீமை என்பது, பிரச்சினைகளின் அதிகரிப்பில் அதிகமாக இல்லை; மாறாக, மக்கள் மீதான அக்கறை குறைந்து வருவதில் உள்ளது.”

செப்டம்பர் 22, மத்திய தரைக்கடல் கூட்டத்திற்கான உரை