Namvazhvu
பொன்விழாக் காணும் ரேடியோ வெரித்தாஸ் வானொலி
Monday, 24 Jun 2019 07:02 am

Namvazhvu

1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஆசிய மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ரேடியோ வெரித்தாஸ் தன் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தது.
1958 ஆம் ஆண்டு, ஆசிய மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்களிலிருந்து 100க்கும் அதிகமான ஆயர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் புனித தோமா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் கூடிய வேளையில், கத்தோலிக்கத் திருஅவையால் இயக்கப்படும் ஒரு வானொலி குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஜெர்மன் நாட்டு கத்தோலிக்கர்களின் நிதி உதவியோடு, க்யூஸோன் ணுரநணடிn நகரில் கட்டப்பட்ட கத்தோலிக்க வெரித்தாஸ் வானொலி நிலையம், 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி, வத்திக்கான் பிரதிநிதியான கர்தினால் அந்தோனியோ சமோரே (ஹவேடிniடி ளுயஅடிசந) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித ஆறாம் பவுல், பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில், நவம்பர் 29 ஆம் தேதி, வெரித்தாஸ் வானொலி நிலையத்திற்குச் சென்ற
போது, “இந்த வானொலி, கிறிஸ்துவின் படிப் பினைகளை மக்கள் மனங்களில் எதிரொலிக்கச் செய்கிறது” என்று பாராட்டினார். .
1981 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், இந்த வானொலி நிலையத்திற்குச் சென்ற வேளையில், “ஆசிய கிறிஸ்தவத்தின் குரலொலியாக” இந்த வானொலி விளங்குகிறது என்று பாராட்டினார்.
அப்படிப்பட்ட வெரித்தாஸ் வானொலி 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடு கிறது.  இதனை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அதற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.  வெரித்தாஸ் வானொலி நிலையம்,
நற்செய்தியைப் பறைசாற்றவும், வறியோரின் சார்பாக எழும் அன்புக்குரலாக விளங்கவும், தான் வாழ்த்துவதாகவும்  அன்பின் இறைவனை நோக்கியும், உண்மையை நோக்கியும் நேயர்களின் உள்ளங்களைத் திருப்பும் என்று தான்
நம்புவதாகவும், அதற்காக செபிப்பதாகவும் திருத் தந்தை தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பொன்விழா ஆண்டு நிறைவு விழா, மணிலாவில் உள்ள புனித தோமா பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட வேளையில், பிலிப்பைன்ஸ் நாட்டு திருப்பீடத் தூதர், பேராயர், கப்ரியேலே ஜியாடானோ காக்சியா திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.
இவ்விழாவில் பேசிய மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், அறியாமையை நீக்குவதற்கும், உண்மைக்குப் பணியாற்றுவதற்கும் வெரித்தாஸ் வானொலி ஒரு கருவியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
குரலற்ற வறியோரின் சார்பாகவும், மறக்கப் பட்டு, சமுதாயத்தின் ஓரங்களில் தள்ளப்பட்டுள்ள மக்களை மையப்படுத்தியும், வெரித்தாஸ் வானொலி தன் பணிகளைத் தொடரும் என்று, ஆசிய
ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான மியான்மர் கர்தினால் சார்ல்ஸ் மாங்போ அவர்கள் கூறினார்.