Namvazhvu
சமூகக் குரல்கள்
Tuesday, 10 Oct 2023 06:54 am
Namvazhvu

Namvazhvu

“நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் யுகத்தில் வாழ்கின்றோம். மனிதனுக்கும், இயந்திரத்துக்கும் வேறுபாடு இல்லாதது போன்ற சூழல் உருவாகி வருகின்றது. மனிதனுக்கும், இயந்திரத்துக்கும் வேறுபாடு இல்லை என்பதால், நாம் நமது சிந்தனைத் திறனைக் குறைத்துக்கொள்ள விரும்பக்கூடாது. மனித இனம் மனித நேயத்தைக் கொள்ளையடிப்பதை நாம் அனுமதிக்க முடியாது அல்லது அனுமதிக்கக் கூடாது.”

- நீதிபதி மகேஷ் சோனக், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் முறையாக, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓ.பி.சி.) எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய முடியும். மத்திய அமைச்சரவைச் செயலர் மற்றும் துறை செயலாளர்கள் உள்ளிட்ட 90 அரசு உயர் அதிகாரிகள்தாம் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். கொள்கைகள் உருவாக்கம் மற்றும் சட்டம் இயற்றுவதில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர்களுக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், அரசு உயர் அதிகாரிகளும் சட்டங்களை இயற்றுகிறார்கள்.”

- திரு. ராகுல்காந்தி, காங்கிரஸ் மேனாள் தலைவர்

“தமிழ் மொழிபெயர்ப்பில் இப்போது கூகிள் டிரான்ஸ்லேட்டோடு போட்டியிடும் மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். நாம் செயற்கை நுண்ணறிவை விஞ்சாவிட்டால், அந்த ரோடு ரோலர் நம்மீது ஏறிச் சென்றுவிடும். நாம் கவனம் செலுத்த வேண்டியது, இலக்கு வடிவம் மூல வடிவத்தின் நோக்கத்தையும், பாணியையும் தமிழில் வெளிப்படுத்தியிருக்கிறதா? இல்லையா? என்பதுதான். வெளிப்படுத்தத் தவறினால், மொழிபெயர்ப்பு தோற்றுப் போய்விடும் அல்லது செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பே போதும் என்றாகிவிடும்.”

- திரு. ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்