“இயேசுவின் சிலுவையானது, நம்பிக்கையின் ஒவ்வொரு தேர்வுக்கும் அளவு கோலாக மாறுகிறது. திரு அவையின் வலிமை, உயிர், நம்பிக்கை, கிறிஸ்தவ பேறுபலன்கள் ஆகியவை அனைத்தும் சிலுவையிலிருந்தே வருகின்றன.”
- அக்டோபர் 9, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான செய்தி
“மனித வாழ்வின் மூன்று இரகசியமான வார்த்தைகள்: நன்றி, அனுமதி, மன்னிப்பு. இவை மூன்றும் மிகச்சிறிய வார்த்தைகளாக இருந்தாலும், நமது வாழ்வில் அதிக பலன் கொடுப்பவை.”
- அக்டோபர் 8, ஞாயிறு மூவேளைச் செப உரை
“மனக்கசப்பால் சூழப்பட்டு, வன்முறையின் சூழலில் வாடும்போது, அதிருப்தி, பழிவாங்கல், தவறான புரிதல், பொறாமை ஆகியவை நம் மனத்தில் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில், நன்றியுணர்வை நாம் நமக்குள் ஏற்படுத்திக் கொண்டு வாழும்போது, அந்த நன்றி உணர்வு நமக்கு அமைதியைத் தருகின்றது.”
- அக்டோபர் 8, ஞாயிறு மறையுரை
“பொருளாதாரம் என்பது வறுமை, நோய், போர், ஆயுதம் இவற்றிற்காக உருவாக்கப்படும் பொருள்களால் கிடைக்கும் இலாபத்தில் வருவதல்ல; மாறாக, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துப் பராமரிப்பதில் உள்ளது.”
- அக். 7, பிரான்சிஸ்குவின் பொருளாதாரக் கூட்டத்திற்கான செய்தி
“கிறிஸ்துவின் வரவேற்கும் பார்வையானது, அனைவரையும் மீண்டும் மீண்டும் வரவேற்கும் ஒரு திரு அவையாக இருக்க நம்மை அழைக்கிறது. சோர்வடைந்தவர்களே, ஒடுக்கப்பட்டவர்களே, வாருங்கள், உங்கள் வழியை இழந்தவர்களே, நம்பிக்கையின் கதவுகள் மூடப்பட்டவர்களே திரு அவை உங்களுக்காக உள்ளது.”
- அக்டோபர் 6, திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி
“பணக்கார நாடுகள் பெருமளவான மாசுக்கேட்டிற்குக் காரணமாக இருக்க, அதன் தீய விளைவுகளை அனுபவிப்பவர்களாக ஏழைகள் உள்ளார்கள். உலகம் என்பது சுரண்டப்படுவதற்கென படைக்கப்பட்டதல்ல; நாமும் உலகின் மற்றும் சுற்றுச்சூழலின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்.”
- அக்டோபர் 4, ‘கடவுளைப் புகழ்வோம்’ சுற்று மடல்