“தாழ்ச்சி ஒருவரைக் கடவுளுக்கும், உடன் வாழும் சகோதரர்களுக்கும் நெருக்கமானவர்களாக மாற்றும் திறன் கொண்டது. மேலும், புத்திசாலித்தனமான மற்றும் அமைதியான பணியாற்றும் திறன், கொடுப்பதை உன்னதமாக்குகிறது; பெறுவதை எளிதாக்குகிறது மற்றும் இயல்பாகப் பகிர்கிறது.”
- நவம்பர் 6, இத்தாலி இறை இரக்கக் குழுவினருக்கான செய்தி
“சமூகம் மற்றும் திரு அவை வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டுள்ள நாம், பிளவுபட்ட இதயத்தோடு அல்ல; மாறாக, உண்மையான அருள்பணியாளராக, மேய்ப்புப்பணி ஆற்றுபவராக, அரசியல்வாதியாக, ஆசிரியராக, பெற்றோராக... மற்றவர்களுக்கு எதைச் சொல்கின்றோமோ, அதை நாம் முதலில் செய்பவர்களாக, நம்பிக்கையுள்ள சான்றுகளாக மாற வேண்டும்.”
- நவம்பர் 5, ஞாயிறு மூவேளைச் செபவுரை
“தூய ஆவியானவர் மக்களின் திருமுழுக்கு அனுபவம், ஆன்மிகம் மற்றும் தூய்மைத்தனத்தை ஊக்குவிக்கின்றார். திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஏற்கெனவே கிறிஸ்தவர்கள் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தூய்மையின் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும்.”
- நவம்பர் 4, அருங்கொடை குழுவினருக்கான செய்தி
“பகுத்தறிவின் பயன்பாடு மற்றும் சிந்தனையின் ஆழம் செபத்திலிருந்து எழும்போது மட்டுமே அறிவின் பாதைகளைத் திறக்கின்றன. கடவுளின் அருள் செல்வம் மிகுதியானது, அவருடைய ஞானமும், அறிவும் ஆழமானவை, அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை, அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.”
- நவம்பர் 3, திருப்பீடக் கல்வித்துறைக்கான செய்தி
“நம்பிக்கையின் அருளை அதாவது, ஒருபோதும் ஏமாற்றம் தராத நம்பிக்கையின் அருளை நாம் இறைவனிடம் கேட்க வேண்டும். இந்த நம்பிக்கை எனும் நற்பண்பு நம்மை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது. பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல பிரச்சினைகளுக்கான நல்வழிகளைத் தேடவும் உதவுகிறது.”
- நவம்பர் 2, கல்லறைத் திருநாளுக்கான மறையுரை
புனிதர்கள் என்பவர்கள் நமது மூத்தச் சகோதரர் சகோதரிகள், அவர்களை நாம் எப்போதும் நம்பலாம்; அவர்கள் நம்மை ஆதரிக்கின்றனர்; நமது வாழ்வின் பயணத்தில் நாம் தவறான திருப்பத்தைத் தெரிவு செய்யும்போது, அவர்கள் நம்மைத் திருத்தி, நமக்கு நல்வழி காட்டுகின்றனர்.
- நவம்பர் 1, அனைத்துப் புனிதர்கள் விழாவுக்கான செய்தி