Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
Wednesday, 13 Dec 2023 07:41 am
Namvazhvu

Namvazhvu

“அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள், சமூகத்தின் எதிரிகளாக எப்போதும் கருதப்படுவார்கள்.”

- டிசம்பர் 4, வன்முறையில் ஈடுபடுவோருக்கான செய்தி             

“அன்பு  நிறைந்த எதிர்பார்ப்புடன் நாம் இயேசுவை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். நற்கருணை, இறைவார்த்தை, உடன் வாழும் சகோதர-சகோதரிகள் குறிப்பாக, மிகவும் தேவையிலிருப்பவர்கள் வழியாக இறைவன் நம்மைச் சந்திக்க வருகிறார்.”

- டிசம்பர் 3, ஞாயிறு மறையுரை

“எளிய மக்களின் குரலுக்குச் செவிமடுத்தல், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல், நமது நேரத்தை அவர்களுக்காக அளித்தல் போன்றவற்றைச் செய்யும்போது இயேசுவுக்கே நாம் செய்கின்றோம்; அவரையே நாம் சந்திக்கின்றோம்.”         

 - டிசம்பர் 3, ஞாயிறு மூவேளை செபவுரை

“பூமியின் அழுகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  ஏழைகளின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க வேண்டும். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. முன்னெப்போதையும் விட இப்போது நாம் தேர்ந்தெடுக்கும் நிகழ்காலத்தைப் பொறுத்தே நம் அனைவரின் எதிர்காலமும் உள்ளது.”

- டிசம்பர் 2, ‘COP  28’ கூட்டத்திற்கான செய்தி

“திரு அவைச் சட்டத்தொகுப்பு இறைஞானத்திலும், செபத்திலும் மற்றவர்களுக்குச் செவிசாய்ப்பதிலும், விடாமுயற்சியுடன் கற்பிப்பதிலும், நீங்கள் பணிபுரியும் மறைமாவட்டங்களின் தீர்ப்பாயங்களும், தலைமை நிர்வாகமும்  திரு அவையின் அன்றாட வாழ்க்கையில் எது அவசியம் என்பதை அடையாளம் காண வழிகாட்டுகின்றன.”

- டிசம்பர் 1, திரு அவையின் சட்ட நிபுணர்களுக்கான செய்தி

“குருத்துவப் பள்ளி மாணவர்கள், அர்த்தமுள்ள துறவு வாழ்க்கையை வாழவும், சோதனைகள் மற்றும் சிரமங்களை எதிர்க்கவும், இயேசுவுடன் நெருக்கமான, திடமான மற்றும் உண்மையான தொடர்பைப் பேண வேண்டும். இயேசு மட்டுமே போதுமானவராக இருந்தால், அவர்களுக்குப் பெரிய உறவுகளின் தொடர்புகளும், இறை ஊழியத்தில் வெற்றி அல்லது மகத்தான ஆறுதல் தேவையில்லை. அவர்களுக்கு நிதி, உடைமைகள், தொழில்கள், புகழ் அல்லது குழப்பமான பாசங்கள் தேவையில்லை.”

- டிசம்பர் 1, பிரான்ஸ் குருத்துவப் பள்ளி மாணவர்களுக்கான செய்தி