Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள்,  மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
Tuesday, 02 Jan 2024 07:22 am
Namvazhvu

Namvazhvu

கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும், நமது நாகரிகமும் ஆபத்தில் இருக்கின்றன என்பதை உணர்த்துவதன் பெயர்தான் புலம்பெயர்தல் ஆகும்.”

- டிசம்பர் 18, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

நாம் தனியாக மீட்படைய முடியாது; மாறாக, கடவுளின் துணையுடன் வாழ்வின் ஒளியைக் கண்டறிய முடியும். பணியார்வம், நிலைத்தத்தன்மை, தாழ்ச்சி, சான்றுள்ள வாழ்வு, கடவுளின் அருள் போன்றவற்றுடன் நாம் ஒவ்வொருவரும்  பிறர் வாழ்வில் ஒளிரும் விளக்குகளாகச் சுடர்விட முடியும்.”

- டிசம்பர் 17, ஞாயிறு மறையுரை

கிறிஸ்து பிறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது செயல்பாடுகள் அமைதிக்கான பாதைகளைத் திறப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தட்டும். போர் என்பது வன்முறை; அதனால்தான் கடவுள், உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்.”

- டிசம்பர் 17, ஞாயிறு மூவேளைச் செப உரை

மீட்பராகிய இயேசு, வறுமை, துன்பம், நிறைகுறைகள் என நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை நாடி வருகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் மீண்டெழவும், மன்னிக்கப்படவும், மீட்கப்படவும் நம்மைப் போல நமக்காக வருகின்றார்.”

- டிசம்பர் 16, உலக மக்களுக்கான செய்தி

முதலில் கடவுளையும், இரண்டாவது அயலாரையும், மூன்றாவதாக படைப்பையும் அன்புகூர நம்மை அர்ப்பணிக்க வேண்டும். உடன்பிறந்த உணர்வு நிலைகளைப் பகிர்ந்து, அன்பின் பாதையில் அர்ப்பணத்துடனும், நம்பிக்கையுடனும் நடைபோடுவோம்.”

- டிசம்பர் 15, கத்தோலிக்கச் சிறார் அமைப்பிற்கான செய்தி

மனித உயிர்களை மீட்பதும், அவற்றைப் பேணிக்காப்பதும் நமது முதன்மையான, முன்னுரிமையாக இருக்க வேண்டும். இன்று நாம் ஏராளமான செய்திகள் மற்றும் புள்ளி விவரங்களில் மூழ்கிவிடுகின்றோம். ஆனால், இந்த எண்களுக்குப் பின்னால் மனித முகங்கள் இருப்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம்.”

- டிசம்பர் 14, புலம் பெயர்ந்தோர் அமைப்பிற்கான செய்தி