“தவக்காலத்தில் கடவுளன்பு, சகோதர அன்பு என்னும் ஒரே அன்பில் வாழ நாம் அழைக்கப்படுகின்றோம். செபத்தில் நம்மை நிலைநிறுத்துவோம். கடவுளுடைய வார்த்தையை நம்மில் வரவேற்பதில், காயப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு முன், நல்ல சமாரியன் போன்று நம்மை நாம் நிலைநிறுத்துவோம்.”
- மார்ச் 4, திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி
“போரினால் ஏற்படும் இத்தகைய துன்பங்கள், எளியவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.”
- மார்ச் 3, மூவேளைச் செப உரை
“தவக்காலப் பயணத்தில் நமக்குள்ளும், நம்மைச் சுற்றிலும் சந்தைகளை அல்ல; மாறாக, இல்லங்களை உருவாக்கச் செபிப்போம். கஞ்சத்தனம் மற்றும் அவநம்பிக்கைக் கொண்ட சந்தைகளைப் போலல்லாமல், நம்பிக்கையுள்ளவர்களாக, தொய்வின்றி இறைத்தந்தையின் கதவை நாம் தட்டுவோம்.”
- மார்ச் 3, ஞாயிறு மறையுரை
“குழந்தைகளாகிய நீங்கள், நாம் அனைவரும் குழந்தைகள், சகோதர-சகோதரிகள் என்பதை நினைவூட்டுகிறீர்கள். இந்த உலகத்திற்குப் பிறரால் கொண்டு வரப்பட்ட நாம், பிறரை அன்பு செய்வதிலும், பிறரிடம் இருந்து அன்பைப் பெறுவதிலும் வளர்ச்சி அடைய வேண்டும்.”
- மார்ச் 2, உலகக் குழந்தைகள் தினத்திற்கான செய்தி
“செபிப்பது, செபிக்கக் கற்பிப்பது ஆகிய இரண்டும் திரு அவையின் மிக முக்கியமான பணிகள். நம்பிக்கை என்னும் விளக்கை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள்.”
- மார்ச் 1, அகில உலகத் திரு அவைக்கான செய்தி