Namvazhvu
தமிழக வரலாற்றின் கறுப்பு தினம்- மே 22
Monday, 24 Jun 2019 09:36 am

Namvazhvu

மே 22. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பதிமூன்று பேர் கொல்லப்பட்ட தினம். தமிழக வரலாற்றின் கறுப்பு நாள்.  அரசப் பயங்கரவாதத்தின் சாட்சியாகத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளது. உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஜனநாயக வழியில் அகிம்சை முறையைக் கடைபிடித்துச் சென்று மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மயானமாகிப் போன நாள். ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்த நாள். ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட கேவலமான படுகொலையை தமிழக அரசே மேற்கொண்ட நாள். தன் மக்களைத் தானே கொன்ற எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, தானும் பாசிசத்தின் எச்சமே என்பதை எண்பித்த நாள். முள்ளிவாய்க்கால் படுகொலையைப்போல இதுவும் வரலாற்றின் பெருந்துயரம்.  இன்னும் தமிழக அரசு தான்தோன்றித்தனமாக மக்களின் ஜனநாயக வலிமையை மதிக்காமல் ஸ்டெர்லைட் ஆலயத்தின் நிர்வாகத்திற்குப் பணிந்துபோவதும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இந்த ஆலையை நிரந்தரமாக மூடி, சீல் வைக்காமல், கண் கட்டி வித்தை காட்டுவதும் தமிழகத்தின் சாபக்கேடு.
அரசு கொலை செய்த 13 பேரின் உடற்கூறாய்வு அறிக்கை அரசப் பயங்கரவாதத்தின் சாட்சியமாக உள்ளது. மே மாதம் 24, 25-2018 அன்று நடை பெற்ற உடற்கூறாய்வை அவசர கதியில்
செய்துவிட்டு, நீதிமன்றத்தின் வழி காட்டுதலுக்குப் பிறகு, ஜூன்மாதம் ஆறாம்தேதி நடைபெற்ற கூராய்வில் இந்தத் துப்பாக்கிச் சூடு மிக மிக அரு கிலிருந்து நடத்தப்பட்டுள்ளது, குண்டுக் காயத்தைச் சுற்றி ஏற்பட்டுள்ள தீ வளையம், கறுப்பு வளையம் ஆகிய அப்ராய்சன் காலர் (யசெயளiடிn உடிடடயச), கிரிஸ் காலர் (பசநயளந உடிடடயச)  ஆகியன இதனை உறுதி செய்கின்றன.
சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேர்
தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டுள் ளனர்; அதுவும் உயிரைத் தற்காத்துக்கொள்ளத் தப்பி ஓடும்போது சுடப்பட்டுள்ளனர்.  18  வயது
ஸ்னோலினுக்கு பின் கழுத்தில் பாய்ந்த குண்டு வாய் வழியாக வெளியேறியுள்ளது. 22 வயது ரஞ்சித் குமாருக்கு மூளை சிதிறியுள்ளது. 40 வயது ஜான்சிக்கு மூளைச் சதைகளே காணாமல் போய் உள்ளன. 45 வயது தமிழரசனுக்கு பின்னந்தலையைத் துளைத்து நெற்றி வழியாகக் குண்டு வெளியேறியுள்ளது. 40 வயது கிளாஸ்டனுக்கு இதயப்பகுதியில் குண்டு துளைத்துள்ளது. செல்வசேகர் குண்டுகளே துளைக்காமல் பூட்ஸ் கால்களால் மிதிக்கப்பட்டு, லத்தியால் அடிக்கப்பட்டே கொல்லப்பட்டிருக்கிறார். மணிராஜனுக்கு தலையில் ஜெயராமனுக்கு முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன. கந்தையா என்பவரின் உடலில் குண்டு முதுகுப் புறத்திலிருந்து இதயப்பகுதி வழியாக வெளியேறியுள்ளது. இவர்கள் கொல்லப்பட்டவிதத்தை வைத்துப் பார்க்கும்போது கூட்டத்தைக் கலைக்க அல்ல; கொன்று குவிக்கவே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பது நிரூபணமாகியுள்ளது.  ஜூன் மாதமே மருத்துவர்கள் கொடுத்த உடற்கூறாய்வு அறிக்கையை ஏழுமாதங்கள் கழித்து, தாமதமாக மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு குடும்பத்தினரிடம் அரசு ஒப்படைத்துள்ளது வெட்கக்கேடானது. கலவரப் பகுதிகளில் காயம்பட்டவர்களையும் அடிபட்டவர்களையும் சிகிக்சைக்குக் காவலர்கள் எடுத்துச் செல்லாததே மிகப் பெரிய விதிமீறல். மே 22 நம் தமிழர் வரலாற்றின் கறுப்பு தினம்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு ஏறக்குறைய ஒராண்டுவரை வராத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெட்கமின்றி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற சூழலில் வாக்குச் சேகரிக்க பலத்த பாதுகாப்போடு தூத்துக்குடிக்குள் நுழைந்ததே மடியில் கணம் என்பதை எண்பித்தது.
  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் பத்து கட்ட விசாரணை முடிந்தும் இன்று வரை இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்யாதது அவரது நடுநிலைமையை சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. கூட்டத்தைக் கலைக்க
மார்புக்குமேல் ஏன் சுட்டீர்கள் என்றால் காவல் துறையிடம் தக்க பதில் இல்லை. சிபிஐ தரப்பும் இதுவரை துப்பாக்கிச் சூடு தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை; வழக்கிலும் வழக்கு விசாரணையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.  இதுவும் மிகவும் ஆபத்தானது. மனித உரிமைப் போராளி முகிலன் துப்பாக்கிச் சூடு சம்பந்தான அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆதாரத்தை வெளியிட்ட அன்றே காணாமல் போய்விட்டார்? அரசும் மௌனம் காக்கிறது. கேள்வி கேட்ட முகிலன் எங்கே என்றால் அரசிடம் பதில் இல்லை. ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தும் புண்ணியமில்லை. அரசும் காவல்துறையும் தூத்துக்குடி மக்களின் ஒவ்வொரு அசைவையும் வெட்கமின்றி உளவுப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிற துணைத் தாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் ஆகியோர் இன்னும் விசாரிக்கப்படவில்லை.  ஆக, தமிழகத்திற்கு உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்திய தமிழக அரசின் இந்தப் படுகொலை மனிதத்தன்மையற்றது; அநீதியானது; வெட்கக்கேடானது. இனி தமிழகக் காவல்
துறை, அரசின் ஏவல்துறையாகச் செயல்படாமல், மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அரசு நிவாரணம் என்ற பெயரில் தன்னால் கொல்லப் பட்டவர்களின் உயிர்களுக்கு விலைபேசாமல், தன் தவறை உணர்ந்து மக்களிடமும் நீதிமன்றத் திடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். இனி ஒருபோதும் இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்கள்
நடைபெறாதவண்ணம் விதிமுறைகளை வகுக்க
வேண்டும். சிபிஐ அமைப்பு விரைந்து விசாரணையை முடித்து ஐனநாயகத்தைக் காக்க வேண்டும். காவல் துறை, மக்களை  உளவு பார்ப்பதை விட்டுவிட்டு,  விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதை விட்டு விட்டு, மனித உரிமைக் காவலர்களாகச் செயல்பட வேண்டும். ஒரு நபர் விசாரணை ஆணையமும் காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்று மக்களின் வரிப்பணத்தை விழுங்காமல் விரைந்து முடித்து முழுமையான அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால அறிக்கையை இருவாரங்களுக்குள் தாக்கல் செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். எல்லா
வற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிற ஸ்டெர்லைட் ஆலையை அரசு நிரந்தரமாக மூடி சீல் வைத்து, சட்டமன்றத்தில் தகுந்த சட்டம் இயற்றி, கார்ப்பரேட்டு
களின் கைக்கூலிகளாக அல்லாமல், மக்களின் சௌக்கிதாரராக, காவல்காரனாக இருக்க வேண்டும்.  13 பேர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்! அவர்களின் உயிர்த்தியாகம் வரலாற்றில் போற்றப் படட்டும். மே 23 அதற்கான அறிவிப்பு நாளாக அமைந்திடட்டும்.  அரசு தன் தவறுகளிலிருந்தும் தன் கரங்களில் உள்ள இரத்தக் கறையிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளட்டும். மே 22. தமிழகத்தில்  இன்னொரு நாள் நிகழாதிருக்கட்டும்.