Namvazhvu
உலக ஆயர் மன்றத்திற்குத் திருத்தந்தையின் பத்து பரிந்துரைகள்
Tuesday, 26 Mar 2024 11:47 am
Namvazhvu

Namvazhvu

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாவது அமர்வில் விவாதிப்பதற்காக மறைப்பணியில் எவ்வாறு ஒன்றிணைந்து நடைபோடும் திரு அவையாகச் செயல்படுவது என்பதை அடிப்படையாகக் கொண்டு பத்து கருத்துகளை உலக ஆயர் மாமன்றத்திற்குக் கடிதம் மூலம் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்துள்ளார். அவைகள்:

கீழை வழிபாட்டுமுறை திரு அவைகளுக்கும், இலத்தீன் வழிபாட்டு முறை திரு அவைகளுக்கும் இடையேயான உறவுகளின் சில கூறுகள்.

ஏழைகளின் குரலுக்குச் செவிமடுத்தல்.

டிஜிட்டல் சுற்றுச்சூழலில் மறைப்பணி, குருத்துவ அழைத்தலின் கொடை எனும் ஏட்டை மறைப்பணியில் ஒன்றிணைந்து நடைபோடும் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்தல்

மறைப்பணி சேவை வடிவங்களின் சில இறையியல் கூறுகளை ஆய்வு செய்தல்.

திரு அவைச் சட்டக் கூறுகளை ஆய்வு செய்தல்.

ஆயர்கள், அர்ப்பண வாழ்வு மற்றும் திரு அவை அமைப்புகளிடையே நிலவும் உறவுகள் குறித்த ஏடுகளை மறைப்பணியில் ஒன்றிணைந்து நடைபோடலின் கண்ணோட் டத்தில் மறு ஆய்வு செய்தல்.

இதே கண்ணோட்டத்தில் ஆயர் தேர்வு மற்றும் ஆயர் பணிகள் குறித்து விவாதித்தல்.

இதே கண்ணோட்டத்தில் பாப்பிறைப் பிரதிநிதிகளின் பங்களிப்புக் குறித்து ஆய்வுச் செய்தல்.

திரு அவைக் கோட்பாட்டு, மறைப்பணி மற்றும் ஒழுக்க ரீதியின்  வாதத்திற்கான விசயங்களில் இறையியல் மற்றும் இணைந்து நடைபோடுதலின் துணையுடன் தேர்ந்து தெளிதல்.

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தின் கனிகளைத் திரு அவை நடவடிக்கைகளில் வரவேற்றல்.