Namvazhvu
புதிய சுவிஸ் கார்ட்ஸ் வீரர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து
Monday, 24 Jun 2019 09:48 am

Namvazhvu

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தை யரின் மெய்க்காப்பாளர்களை, மே 4, சனிக் கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரை யாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், பேதுருவின் வழிவருபவருக்கும், திருப்
பீடத்திற்கும், வத்திக்கான் நகரத்திற்கும், துடிப்புடனும், தாராளமனதுடனும் ஆற்றிவரும் சேவைகளுக்கு, தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள் நாள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் இடம்
பெறுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக மாறுவதன் வழியாக, குறிப்பாக, மரணக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இக்காலச் சூழல்களில், உயிர்ப்புக் கலாச்சாரத்தைப் பரப்புவதன் வழியாக, இந்த வியத்தகு உயிர்ப்பு நிகழ்வை, பலனுள்ள முறையில் வாழ முடியும் என்று கூறினார்.
மனவேதனையிலும், குழப்பத்திலும், மன
உளைச்சலிலும் வருகின்ற மக்களைச் சந்திக்கும்
வேளையில், ஆறுதலான வார்த்தை கள் மற்றும் உடன்பிறந்த உணர்வுகளை  வெளிப்படுத்தும் போது, சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், உயிர்த்த கிறிஸ்து வின் உயிருள்ள சாட்சிகளாக மாறுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
நம் மீட்பராம் கிறிஸ்துவின்மீது ஆழமான விசுவாசத்தால் வேரூன்றப்படுவதும், தனிப்பட்ட
மற்றும் குழுவின் புதுப்பித்தலின் திருத்தூதர் களாகவும், சாட்சிகளாகவும் வாழ்வதும் தேவைப் படுகின்றன, ஏனெனில், திருப்பீடத்தின் பணியில் இருப்பவர்கள், தங்களின் பணியில் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் தூய வாழ்வு வாழ வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும், திருத்தந்தை கூறினார். இத்தகைய வாழ்வை, சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், தங்களின் பணியிலும், குழு அனுபவத்திலும் வாழ இயலும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், இந்த வீரர்களை இந்தப் பணிக்கு அர்ப் பணித்த அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
சுவிஸ் கார்ட்ஸ் வீரர்கள், அன்றாடப் பணி களில் தாங்கள் சந்திக்கும் அனைவரும், தங்கள் வழியாக, மனிதர் ஒவ்வொருவர் மீதும், இறைவன் வைத்திருக்கும் அன்பைக் கண்டுணரச் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். இறைவன்,
மனிதர் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அன்பைக் கண்டுணரச் செய்வது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் முதல் மறைப்பணியாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.