“இளையோரே, நாம் அனைவரும் கடவுளின் அன்புக்குரிய குழந்தைகள் என்ற மாபெரும் கொடையைப் பெற்றுள்ளதால், அவருடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.”
- ஏப்ரல் 29, வெனிஸ் நகர் இளையோருக்கான செய்தி
“இயேசுவில் ஒன்றித்திருப்பதன் வழியாக மட்டுமே நற்செய்தியின் பலன்களான நீதி மற்றும் அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அக்கறை, நமது சுற்றுச்சூழல் மற்றும் மனித பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நமது தேர்ந்து தெளிதல்களை நாம் வாழும் எதார்த்தத்திற்குக் கொண்டுவர முடியும்.”
- ஏப்ரல் 28, ஞாயிறு மூவேளைச் செபவுரை
“கிறிஸ்துவுடன் ஒன்றித்திருப்பது என்பது, அவருடன் உறவை வளர்த்துக்கொள்வது, அவருடன் உரையாடுவது, அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வது மற்றும் இறையாட்சியின் பாதையில் அவரைப் பின்பற்றுவதாகும்.”
- ஏப்ரல் 28, ஞாயிறு மறையுரை
“வெற்றிடமாக மாறியுள்ள இவ்வுலகில் கடவுளைக் கொண்டு நாம் நிரப்ப வேண்டும் என்று ஆய்ந்து தெளிவதன் வழியாக, நாம் நம் சமூகங்களிடையே இறைவனைக் கொண்டு வருவதுடன், நல்லதொரு சமூகத்தையும், தலத் திரு அவையையும் கட்டியெழுப்ப முடியும்.”
- ஏப்ரல் 27, ஸ்பெயின் குருமட மாணவர்களுக்கான செய்தி
“நம்மீதான இறைவனின் கருணைப் பார்வை நம் இதயங்களின் கடினத்தை மிருதுவாக்கி, நம் காயங்களைக் குணப்படுத்தி, நம்மையே உற்றுநோக்க உதவும் புதிய கண்களை வழங்குகின்றது.”
- ஏப்ரல் 26, திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி