Namvazhvu
சமூகக் குரல்கள்
Wednesday, 15 May 2024 09:00 am
Namvazhvu

Namvazhvu

இணைய வழியில் கல்வி கற்கும் இந்தக் காலத்தில் இளைய தலைமுறையினரைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அவர்களை இணைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லை தாண்டி சிறார்களைக் குறி வைக்கும் இணைய குற்றங்களைத் தடுக்க சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இதற்காகப் பல்வேறு சட்ட அமைப்புகளும் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாகச் சிறார்கள் மேற்கொண்ட குற்றங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளும் நாம், அந்தக் குற்றத்தில் அவர்களை ஈடுபடச் செய்த சமூக-பொருளாதாரக் காரணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.”

- திரு. டி.ஒய். சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

மாமன்னர் போல் பிரதமர் மோடி உள்ளார். அரண்மனையில் வசிக்கும் அவரை நீங்கள் தொலைக்காட்சி சேனல்களில் கண்டால், தூசிகளற்ற பளிச்சிடும் ஆடையில் தோன்றுகிறார். இவர் எப்படி உங்களின் கடின உழைப்பையும், விவசாயத்தையும், உங்கள் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வார்? பண வீக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையை எப்படிப் புரிந்துகொள்வார்? அரசின் அனைத்துக் கொள்கைகளும் பெரும் பணக்காரர்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. பெரும் பணக்காரர்களின் வசதி, வெற்றிக்காகவே அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் உயர்ந்த கொள்கை.”

- திருமதி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்

பத்திரிகைச் சுதந்திரம் மீதான தாக்குதல் சனநாயகத்தை வலுவிழக்கச் செய்கிறது. தவறான தகவல், சுற்றுச்சூழல் பிரச்சினை ஆகியவற்றுக்கிடையே முன்னெப்போதும் இல்லாததைவிட சுதந்திரமான, ஒற்றுமையான, கட்டுப்பாடில்லாத ஊடகம் சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், பத்திரிகைச் சுதந்திரம் என்பது எந்தவொரு நாடும் மறுக்க முடியாத விலைமதிப்பற்ற பொக்கிஷம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.”

- திரு. டென்னிஸ் பிரான்சிஸ்

.நா. பொதுச் சபை தலைவர்