“நீங்கள் எவ்வளவு வலிமை உள்ளவர் என்று உங்களுக்குத் தெரியாது. “வலிமையுடன் இருப்பதுதான் உங்களுக்கு ஒரே வழியாக இருக்கும் வரையில்...”
- பாப் மார்லே.
அனுபவம், கற்பனையை விட ஐயமின்றி உரக்கப் பேசுகிறது. தனது வாழ்க்கைப் பயணத்தில் உண்மையாகவே இருண்ட நாள்களைக் கழித்திருக்கிற ஒருவர், மற்ற வளங்களைவிட அதிகம் நம்பக்கூடிய செய்தியைத் தருகிறார். மேலும், மிக முக்கியமான முழு நிகழ்வு நிலையையும் அவர் பார்க்கப் பயன்படுத்துகிற யுக்தி அது.
வலியின், வேதனையின், துன்பத்தின், அவற்றோடு வரும் துயரங்களின் மெய்நிலைகள் ஆன்மிகப் பரிமாணத்தின் வழியாகக் கிடைக்கும் காட்சியின் உண்மையான, பொருளுள்ள பகுதிகளாக வளர்கின்றன. நேர்மறையான தெய்வீக அதிர்வுகள் ஒருவருடைய கண்ணோட்டம், உலகம் பற்றிய கருத்தாக்கம், தொலைநோக்கு, பண்பு நலன்கள், நடத்தைகள் ஆகியவற்றை உருவாக்குகின்றன.
தனது கவலைகளால் உள் மனத்தில் மாற்றம் பெறுகிற ஒருவர் - நம்பிக்கைகள், அர்ப்பணிப்புகள் ஆகியவற்றைத் தூய்மைப் படுத்துகின்ற ஒருவர் - அன்பு எனும் தெய்வீக நெருப்பால் தொடப்படுகிறார்.
தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய தெய்வீகக் காட்சிகளை அனுபவித்த எண்ணற்ற ஆண்கள், பெண்கள் ஆகியோரின் அறிக்கைதான், சான்றுரைதான் வரலாற்றின் பக்கங்கள். மாற்றத்தின் செயல்முறை வாழ்க்கையின் நிகழ்வு நிலையைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்த்தலின் விளைவுகள்தான் அவைகள். துன்பத்திலும் வேதனையிலும் மேற்கொள்ளப்படும் பயணம், ஐயமின்றி உள் மாற்றத்திற்கும், மறு உருவாதலுக்கும் இட்டுச் செல்கிறது. இவ்வாறு ஏற்படும் உள் மனமாற்றம் வாழ்க்கை, சமுதாயம் ஆகியவற்றின் பிரச்சினைகளைக் கையாள ‘அதிகம் நடந்து செல்லாச் சாலைகளில்’ பயணிக்க இட்டுச் செல்கிறது.
திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா ஒரு முறை, “அவல நிகழ்வு வலிமையின் மூல வளமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இக்கட்டுகள் வரும்போதும், துன்பமிக்க அனுபவங்கள் ஏற்படும்போதும், நாம் தளர்ந்து விட்டோமென்றால், அதுதான் உண்மையான அழிவு” என்கிறார்.
வாழ்க்கையின் இறுதிக்குச் சென்ற ஒருவருக்கு, தெய்வீகக் குறுக்கீட்டினால் அற்புதமாக உயிர் பிழைத்த ஒருவருக்கு என்ன நிகழ்கிறது? அவருடைய வளப்படுத்துகின்ற உள்மாற்றங்களை அவர் உறுதியாகப் பெறுவார். தெய்வீக உள்ளொளியால் ஊட்டம் பெற்று, புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது துன்ப அவலம் வலிமையின் வளமாக ஆகிறது. மேலும், இந்த ஆற்றலின் ஊற்று வாழ்க்கை அவருக்குத் தருவதை ஏற்று, நன்றியுடன் மரியாதை செய்வதை அவருக்குச் சாத்தியமாக்குகிறது.
உள்ளொளி, ஆன்மிக, தெய்வீக அனுபவங்கள் ஆகியவற்றால் உரம் பெற்ற புனித இஞ்ஞாசியார் புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டங்களுடன் வாழ்க்கையின் முழு நிகழ்வு நிலையையும் பார்க்க முடிந்தது. இறை நம்பிக்கையால் புதுமையாக்கப்பட்ட இந்தக் கண்ணோட்டம், அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் கடவுளின் கால் தடங்களை அடையாளம் காண அனுமதித்தது. துன்பம் மிக்க அனுபவங்கள், அவருக்கு வலிமையின் ஊற்றுகளாக மாறின. அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் கடவுள் அவரோடு இருந்து வழிநடத்தி, சிறப்பாக அவருடைய இருண்ட நாள்களின்போது காத்து, பிரசன்னமாயிருக்கிறார் என்று அவர் உறுதியாக நம்பினார்.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகள் வாழ்க்கை எனும் நாவின் உணர்வுகள் ஆகின்றன. இவற்றின் ஒன்றிணைந்த அனுபவங்கள் நமது அகநிலையோடு தொடர்புகொள்ளும் ஓவியத்தின் கூறுகள். அங்கே நாம் கடவுளோடு உண்மையில் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, என்றும் நிலைத்திருக்கும் தெய்வீக உள்ளறிவினால் ஊட்டம்பெற்று உயர்நிலைபெற்ற முழு நம்பிக்கை உறுதிகளினால் புத்தாக்கம் பெற்ற கண்ணோட்டங்களுடனும், உலக ஞானத்துடனும் புதிய காலைப் பொழுதிற்கு நம்மை இட்டுச் செல்ல அவரை அனுமதிக்கிறோம். இதனால் படத் தொகுப்பின் பிரகாசமான வண்ணங்களுடனும், நயங்களுடனும் உலக வாழ்க்கையின் முழு நிகழ்வு நிலையையும் பார்க்கவும், மாறிவரும் பல்வேறு அனுபவங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும், இனிமை மகிழ்ச்சியை மேம்படுத்தும்போது பணிவுடன் இருக்கவும், அம்மகிழ்வைப் புளிப்பு குறைக்கும்போது அமைதியாக இருக்கவும், அம்மகிழ்வை உவர்ப்பு கீழிழுக்கும்போது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளவும், அம்மகிழ்வைக் கசப்பு ஆவியாகச் செய்யும் போது பொறுமை காக்கவும் இயலும்.
ஏனெனில், நம் ஊனக் கண்கள் கதிரவன் ஒளியில் பார்க்கத் தவறினாலும், விண்மீன்கள் அங்கில்லை என்று பொருளாகாது. என்றாங்கு பகலிலும் ஒளி வீசும் விண்மீன்கள் போல படைத்தவர் நம்மோடு பயணம் செய்கிறார் என்பது நமக்குத் தெரியும்.