Namvazhvu
கிறிஸ்தவர்-இஸ்லாமியருக்கான கோடைப்பள்ளி
Wednesday, 15 May 2024 11:32 am
Namvazhvu

Namvazhvu

கோடை விடுமுறையில் மாணவ- மாணவியர்களுக்குப் பலவிதமான பயிற்சி முகாம்கள் நடைபெறுவதுண்டு. குறிப்பாக, கிறிஸ்தவக் குழந்தைகளுக்கு விவிலிய விடுமுறைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஹைதராபாத் மாநிலத்தில் சற்று வித்தியாசமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் இணைந்து உருவாக்கி உள்ள ஹென்றி மார்ட்டின் அமைப்பானது கிறிஸ்தவ-இஸ்லாமிய உறவுகள் பற்றிச் சிந்திக்க ஒரு கோடைகாலப் பள்ளியை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி மே 4 -ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தக் கோடைகாலப் பள்ளியில் வாழ்க்கை உரையாடல், நடவடிக்கை உரையாடல், துறவு வாழ்வு அனுபவ உரையாடல் மற்றும் இறையியல் பரிமாற்ற உரையாடல் என நான்கு வகையான உரையாடல்களில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் செவிமடுத்துக் கலந்தாலோசித்தனர்.