Namvazhvu
இயேசுவின் தலைமைப் பண்புகள்-3 இயேசுவின் கூர்நோக்கு
Thursday, 23 May 2024 07:06 am
Namvazhvu

Namvazhvu

இயேசு கோவிலுக்குள் சென்றார்; கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும், புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.  ‘என் இல்லம் இறை வேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்என்றார்” (மத் 21:12-13). அநீதி  நடக்கும்போது தட்டிக் கேட்டுக் குரல் கொடுத்தவர் இயேசு. நியாயத்திற்காகவும், நேர்மைக்காகவும் குரல் கொடுத்தவர் இயேசு. இது அவருடைய முக்கியத் தலைமைப் பண்புகளில் ஒன்று.

கோவில், வியாபாரத் தளமானதைப் பார்த்து, “இதைக் கள்வர் குகை ஆக்காதீர்கள்என்று கோபத்தால் பொங்கி எழுந்தார். அநீதி இழைக்கப்படும் போது, “விரியன் பாம்புக் குட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடுஎனக் கடின வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

 நம் சமுதாயத்தில் அநியாயம்  நடக்கிறபோது, நம் பதில் நடவடிக்கை, அணுகுமுறை என்ன?

அநீதச் செயல்களில் ஒருவர் ஈடுபடும்போது இயேசுவைப்போல நாம்இது தவறுஎன்று சுட்டிக் காட்டும் தைரியம் வேண்டும். அநீதச் செயல்களுக்கு எதிராக நமது குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். சில நேரங்களில் நம் குரலுக்குப் பலன் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம். ஆனால், தொடர்ந்து ஒலிக்க வேண்டும். ஒருநாள் நிச்சயம்  கண்டிப்பாக நீதி என்னும் கலாச்சாரம் நம் சமூகத்தில் மேலோங்கி இருக்கும். இப்படி நடக்கும்போது சில இடங்களில் நம்மேல் மரியாதை வரும். நாம் சொல்வதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். சில இடங்களில் நம்மேல் வெறுப்பும், அவமரியாதையும் பரிசாகக் கிடைக்கலாம். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் வாழும் சமூகத்தில், குடும்பங்களில் இது ஒரு சவாலே.

நிறுவனம் என்பது ஒரு கோவில். அது  நேர்மை  மற்றும் நியாயம்  போன்ற மதிப்பீடுகளால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அநியாயத்தின் குகைகளாக மாறிவிடக் கூடாது. அதனால்தான் பல நிறுவனங்கள் நேர்மை மற்றும்  நியாயம்  போன்றவற்றைத் தங்கள் நிறுவனcore valuesஆக வடிவமைத்திருக்கின்றன. இந்த மதிப்பீடுகள்  நிறுவனத்தின் நீண்டகால வளமான வாழ்வுக்குச் சூத்திரம்.

நியாயம், நேர்மை என்னும் அடையாளங்களாய், சமரசம் செய்யாமல் மனிதவளத் துறையில் தொடர்ந்து இயேசுவோடு கைகோர்த்துப் பயணிக்கும்போது, இயேசுவைநம் தலைவர்என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும்.

நாம் அதிகம் வாசித்திருக்கும் இன்னொரு நிகழ்வில் பேதுருநீர் மெசியா! வாழும் கடவுளின் மகன்என்று உரைக்கிறார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்; ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றிகொள்ளாவிண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்என்கிறார் (மத் 16:16-17). இது இயேசுவின் பணிக்குத்  தயாரிப்பு (SUCESSION  PLANNING).

பேதுருவின் இறைவெளிப்பாட்டைக் கேட்ட உடனே, இயேசு அவரைப் பாராட்டி ஒரு மேன்மையானப்ரோமோஷன்கொடுக்கிறார். மற்றொரு இடத்தில், ஆண்டவர் மார்த்தாவைப் பார்த்து, “நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ, நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாதுஎன மரியாவின் செயலைப் பாராட்டுகின்றார்  (லூக் 10:41). சரியான திறனுக்கான பாராட்டு இது.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அவரோடு இரண்டு குற்றவாளிகள் சிலுவையில் தொங்குகிறார்கள்ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும், எங்களையும் காப்பாற்றுஎன்று அவரைப் பழித்துரைக்கிறான். ஆனால், மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று சொல்லிய பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்என்கிறான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்என்கிறார்.

இறப்பின் கடைசி தருணத்தில், வேதனையின் உச்சக் கட்டத்தில் தலைவன் இயேசுவின் என்ன ஓர் எழுச்சியூட்டும், ஊக்கமளிக்கும் வார்த்தைகள்! அவர் வாழ்க்கையில் இதுவரை வழங்காத ஒரு பெரும் வெகுமதியை, பேரின்ப வீட்டில், அதுவும் அவரோடு கூட இருக்கும் மகிமை, சிலுவையில் மனம் மாறிய அந்த நபருக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டது.

நம் இல்லங்களில், நாம் வாழும் பணியிடங்களில், எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் பாராட்டும், வெகுமதியும் அளிக்கிறோமா? நாம் பலவித அழுத்தங்கள், கஷ்டங்களில் இருந்தாலும், பிறரின் நற்செயல்களை இனம் கண்டு தவறாமல் பாராட்டுகின்றோமா? இயேசுவிடம் இருந்த கூர்நோக்கிய பார்வை, கவனிப்பு, தகுந்த நேர பாராட்டு நம்மிடம் இருக்கின்றனவா?

இயேசு பேதுருவின் தலைமைப் பண்பை இனம் கண்டு, தம் பணிக்கு அவரைப் பாராட்டித் தயார் செய்வதுபோல (SUCESSION  PLANNING) நாமும் வளரும் தலைவர்களை, நம் இல்லங்களில் பிள்ளைகளைப்  பாராட்டி எதிர்கால ஆளுமைக்குத் தயார் செய்கின்றோமா? நேர்த்தியான திறன்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றோமா?

எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பும், கடமையும் ஆகும்.