Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:
Wednesday, 19 Jun 2024 05:12 am
Namvazhvu

Namvazhvu

“விளையாட்டு வீரர்களே, உங்கள் வாழ்வு என்பது விளையாட்டுத் துறையையும் தாண்டியது. நீங்கள் ஆன்மிகத்தையும், மனித குணங்களையும் வளர்த்துக் கொள்வது முக்கியம். இவற்றின் வழியாக நீங்கள் நல்ல முன்மாதிரியான வாழ்வை முன்னிறுத்த முடியும்.”

- ஜூன் 5, குரோஷி தேசிய கால்பந்து வீரர்களுடன் சந்திப்புச் செய்தி

துன்புறுவோர், கைவிடப்பட்டோர், மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப் படாதோர் இப்படிப்பட்ட அனைவரிலும் இயேசுவின் திருஇதயம் தம் தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்துகின்றது. நாமும் இப்படிப்பட்ட மக்களை அன்போடு, பாசத்தோடு நெருங்கி அணைப்பது, கடவுளை நாம் உண்மையாக அன்புகூர்வதன் வெளிப்பாடாகும்.”

- ஜூன் 7, இயேசுவின் திரு இதயத் திருவிழா ‘எக்ஸ் தளப் பதிவுச் செய்தி

குருமடத்தில் வழங்கப்படும் பயிற்சி மட்டும் போதாது; பயிற்சி என்பது தொடர்ந்து இடம்பெறுவதாக இருக்க வேண்டும். ஏனெனில், மாறிவரும் உலகிற்கு ஏற்ப பயிற்சி முறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். அருள்பணியாளர்கள் தனிமை உணர்வைக் கொண்டிருப்பது கவலை அளிக்கின்றது. அருள்பணியாளரின் வாழ்வு என்பது தனிமையின் பயணமல்ல; மாறாக, உடன்பிறந்த உணர்வுடன் இணைந்து நடைபோட வேண்டியது.”

- ஜூன் 7, அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத் துறையின் ஆண்டு நிறைவு கூட்டச் செய்தி

இசை, நல்லிணக்கத்தை உருவாக்குகிறது; அதன் மூலம் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது; துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது; மனமுடைந்தோருக்கு உற்சாகத்தை மீண்டும் தூண்டுகிறது; அழகு மற்றும் கவிதை போன்ற அற்புதமான மதிப்புகளை வெளிப்படுத்துகிறது. இசைக்கு மொழிபெயர்ப்பும், விரிவான விளக்கமும் தேவையில்லை. பாடகர் குழு உறுப்பினர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் திரு அவைக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்குகிறார்கள்.”

- ஜூன் 8, இசைக்கலைஞர்களுடனான சந்திப்புச் செய்தி

செல்வத்தின் பொருட்டு இயேசு சுதந்திரமானவர்; நாசரேத் கிராமத்தின் பாதுகாப்பை விட்டு, ஏழ்மையான, நிச்சயமற்ற வாழ்க்கையைத் தழுவினார். மேலும், அதிகாரத்தின் பொருட்டு கிறிஸ்து சுதந்திரமானவர்; தம்மைப் பின்பற்றுமாறு பலரை அழைத்தார். அவ்வாறு செய்யுமாறு அவர் எவரையும் வற்புறுத்தவில்லை, அதிகாரமுள்ளவர்களின் ஆதரவை ஒருபோதும் நாடவில்லை. மாறாக, எப்போதும் எளியவரின் பக்கம் நின்றார், தம் சீடர்களுக்கும் அவ்வாறே கற்பித்தார்.”

- ஜூன் 9 - பொதுக்காலத்தின் 10 -ஆம் வார ஞாயிறு மறையுரை