Namvazhvu
சமூகக் குரல்கள்
Wednesday, 03 Jul 2024 05:28 am
Namvazhvu

Namvazhvu

இலங்கைக் கடற்படையினரால் கைதாகியுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும், அடிப்படைத் தேவைகளையும் வழங்க அனுமதி தர வேண்டும். மீனவர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாகத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.”

- திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

மாணவர்களிடம் பரவி வரும் சாதிய வன்முறைகளைத் தவிர்ப்பதற்கான அறிவுரை வழங்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு குழு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களில் சாதி அடையாளத்தை நீக்க வேண்டும்; சாதி அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மாணவர்களின் கரங்களில் வண்ணக் கயிறு கட்டுதல் போன்றவற்றை அறவே தடை செய்ய வேண்டும். மேலும், பல்வேறு சிறந்த பரிந்துரைகளை அளித்திருப்பதை வரவேற்கிறேன். ஆண்டாண்டு காலமாகச் சாதிகளின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தியும், அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தியும் வருபவர்களைத் தவிர, மற்ற அனைவரும் நீதியரசர் சந்துருவின் பரிந்துரைகளை ஏற்று பாராட்டுவர். ஆகவே, அந்தப் பரிந்துரைகளைத் தாமதமின்றி, உடனடியாகச் செயல்படுத்த முதல்வர் மு.. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

- திரு. பழ. நெடுமாறன், தலைவர் - உலகத் தமிழர் பேரமைப்பு

கள்ளச்சாராய வியாபாரம் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல் நிர்வாகத்தின் ஆதரவோடு நடந்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் தொடர்புள்ள ஒவ்வொருவரும் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பி விடாமல் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.”

- இரா. முத்தரசன் (.கம்யூ.)