Namvazhvu
பேராசிரியர் பால் வளன் அரசுக்குத் தங்கப் பதக்கத்துடன் "இந்தியாவின் மாட்சி" விருது!
Monday, 24 Jun 2019 11:05 am

Namvazhvu

நெல்லை, ஏப்ரல் 16 பாளையங்கோட்டைத் புனித யோவான் கல்லூரி முன்னைத் தமிழ்த்துறைத் தலைவரும் உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவரும் ஆகிய பேராசிரியர் பால் வளன் அரசு அறுபது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் மற்றும் கல்விப் பணிகள் ஆற்றி வருவதைப் பாராட்டி, விழுமிய மாந்தர் பதிப்பு நிறுவனம் தங்கப் பதக்கத்துடன் "இந்தியாவின் மாட்சி" விருது வழங்கியுள்ளது.
பேராசிரியர் பால் வளன் அரசு நாற்பத்தைந்து ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார். முப்பது நூல்களை எழுதிப் பதிப் பித்துள்ளார். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சொற் பொழிவுகளை ஆற்றியுள்ளார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இத்தாலி ஆகிய பல நாடுகளில் உரை யாற்றியுள்ளார். பேராசிரியர் மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் முப்பது சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்!
இது பேராசிரியர் பால் வளன் அரசு பெற்ற நூற்று ஆறாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.