“நமது உலகின் பிரச்சினை என்பது அதில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அல்ல; மாறாக, சுயநலம், நுகர்வோர் மற்றும் தனிமனிதவாதம்தான் அப்பிரச்சினைக்குக் காரணம்.”
- ஜூலை 11, ‘எக்ஸ்’ தளப்பதிவு செய்தி
“எதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்தியல்களைப் பிடித்துக் கொண்டிருப்பது தவறு. திரு அவைக்குள் பெண்களின் மறைப்பணிகள், கருத்தியலிலிருந்து அல்ல; மாறாக, அனுபவங்கள் என்ற எதார்த்தத்தைப் பெண்கள் பகிர்ந்துகொள்வதிலிருந்து துவங்குகிறது.”
- ஜூலை 12, ‘ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவையில் பெண்களும், அவர்களின் மறைப்பணிகளும்’ நூலின் அணிந்துரை செய்தி
“கடவுளின் தாயான புனித கார்மேல் அன்னை போரின் துயரத்தால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆறுதல் அளித்து அமைதியை அளிக்கட்டும்.”
- ஜூலை 14, மூவேளைச் செப உரை செய்தி
“கடவுளின் மகிழ்ச்சியையும், அன்பையும் முழுமையாக அனுபவிக்க, தேவையற்ற சுமையை விட்டுவிடுங்கள். இது நம்மைச் சுமையாக்குகிறது, இறைவனை நோக்கிய பயணத்திற்கு இடையூறாக உள்ளது.”
- ஜூலை 14, ஞாயிறு மறையுரை செய்தி
“கடவுளின் அன்பு எளிமையானது; அவரது அழகு எளிமையானது. நற்கருணை பிரசன்னத்தின் முன் அமர்ந்து அவருடன் உரையாட வேண்டும். மனப்பாடம் செய்யப்பட்ட செபங்களைச் செபிப்பதைவிட, இதயத்தின் ஆழத்தில் இருந்து இறைவனுடன் உரையாடுவது சாலச்சிறந்தது.”
- ஜூலை 15, துறவற அருள்சகோதரிகளின் பொதுப்பேரவைச் சந்திப்புச் செய்தி