Namvazhvu
உடல்நலனைக் கெடுக்கும் ‘ஆன்லைன்’ உணவு
Monday, 24 Jun 2019 11:28 am

Namvazhvu

தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில், வீடு அல்லது பணிபுரியும் இடத்தில் இருந்தபடியே, மொபைல் போன் செயலிகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து, இருக்கும் இடத்திற்கு வரவழைத்து உண்பது சர்வசாதாரணமாக நடக்கிறது.
டெலிவரி செய்யும் இப்பணியை பகுதி நேரமாகச் செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர் பலர் இளைஞர்கள்.
ஒரு பிரபல, ஆன்லைன் செயலியில் டெலிவரி செய்யும் ஒருவர், வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய உணவுப் பொட்டலத்தை பிரித்து, அவரது நண்பருடன் சிறிது எடுத்து சாப்பிட்டு, மீதியை கவரில் போட்டு, ரப்பர் பேண்ட் கட்டி, ‘பேக்’ செய்து கொண்டு சென்றார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் இது பற்றி அந்த பிரபல கம்பெனயில் டெலிவரி செய்யும் பணியில் இருக்கும் தன் நண்பரின் தம்பியைக் கேட்டபோது அவர் சொன்ன தகவல் அவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெரும்பாலும், கல்லூரி மாணவர்கள் பகுதிநேரமாகச் வேலை செய்யும் இந்தக் கம்பெனியில் இதுபோன்ற நிகழ்வுகள் மிகச்சாதாரணமாக நடக்குமென்றும், இன்னும் சில ஓட்டல்களில் பழைய, தரமற்ற மற்றும் மீந்து போகும் உணவுகளைச் சூடு செய்து ‘ஆபர்’ என்ற பெயரில் தள்ளிவிடுவர் என்றும் கூறினார்.
நம்பி உண்ணும் மக்களை ஏமாற்றி, அவர்கள் ஆரோக்கியத்தில் விளையாடும் சில சில சுய நலம் கொண்ட, உணவகங்கள் மற்றும் டெலிவரிசெய்யும் நபர்களிடமிருந்து தப்பிக்க கீழ்கண்ட வழிகள் உள்ளன.
1. உணவகங்களிடம் உணவுகளை சீல் செய்து அனுப்பும்படி வற்புறுத்த வேண்டும்.
2. மிகவும் நம்பகமான உணவகங்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும். முடிந்தால் நேரில் சென்று உண்மை நிலவரத்தை தெரிந்து வரலாம்.
3. இதை எல்லாம் விட மேலான வழி என்னவென்றால், சிரமம் பார்க்காமல், மார்க்கெட்டுக்குச் சென்று, தேவையான காய்கறிகளை வாங்கி வந்து, அம்மாவிடமோ, மனைவியிடமோ கொடுத்து, கூடமாட சமையலில் ஒத்தாசை செய்து வீட்டிலேயே சமைத்து உண்பது நல்லது.